மஹா வைத்யநாதம்

மஹா வைத்யநாதம்-பெரியவாளோட மஹிமை!

ஸ்ரீமடத்தில் கைங்கர்யம் பண்ணிவந்த ஒரு பாரிஷதரின் குடும்பம் சென்னையில்

இருந்தது. அவரது மனைவி பெரியவாளிடம் மிகுந்த பக்தி பூண்டவள். ஒருநாள்
காஞ்சிபுரம் வந்து பெரியவாளை தர்சனம் பண்ணிக்கொண்டிருந்தபோது அந்த அம்மாவுக்கு
திடீரென்று உடனே சென்னை போகவேண்டும் என்ற உந்துதல் உண்டானது. அதிகம்
யோசிக்காமல் உடனே கிளம்பி சென்னை வந்து வீட்டுக்கு போனதும்தான் அந்த
அதிர்ச்சியான தகவல் தெரிந்தது….அவளுடைய பெண் வயிற்று பேரன்
விளையாடிக்கொண்டிருக்கும்போது,மேல் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து,
வடபழனியில் உள்ள ப்ரைவேட் ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டிருக்கிறான் என்பது!
ஆடிப்போனாள் பாவம். I C U வில் இருந்த பத்து வயஸ் பேரனை பார்க்கக்கூட
முடியாமல் ஹாஸ்பிடல் வராந்தாவில் குடும்பமே நடையாய் நடந்து கொண்டிருந்தது.
தலையில் நல்ல அடி என்பதால், நிலைமை கொஞ்சம் கவலைக்குரியதாகத்தான் இருந்தது.
ரத்தம் நிறைய போயிருந்ததால் பிழைப்பது ஸ்ரமம், அப்படிப்
பிழைத்தாலும்,நரம்புகள் பெருமளவில் பாதிக்கப் பட்டிருப்பதால்,கை கால்கள்
செயல்படுமா என்பது சந்தேஹம் என்றெல்லாம் அதிர்ச்சி குண்டுகளை அள்ளி
வீசினார்கள் டாக்டர்கள்!

பாட்டிக்கோ “இனிமே இந்த டாக்டர்களை நம்பறதைவிட, கண்கண்ட தெய்வம் பெரியவாளோட
பாதங்களை பிடிச்சிண்டு என் பேரனுக்கு உயிர் பிச்சை கேக்கறேன்” என்று
கூறிவிட்டு, ஓடினாள் மறுபடியும் காஞ்சிக்கு! அன்று அதிக கூட்டம் இல்லை. உள்ளே
நுழைந்து பெரியவாளை தர்சிக்கும் வரை அடக்கி வைத்திருந்த அழுகை, பீறிட்டுக்
கொண்டு வந்தது. பாரிஷதர்கள் “மாமி, அழாம என்ன விஷயம்னு பெரியவாட்ட
சொன்னாத்தானே தெரியும்! நிதானத்துக்கு வாங்கோ” என்று சமாதானப்படுத்தினர்.
பெரியவா அமைதியாக அவளைப் பார்த்துக்கொண்டிருந்தார்.அவருக்கு சொல்லியா
தெரியவேண்டும்? காலஸம்ஹார மூர்த்தியாயிற்றே!

“சோதனை போறும் பெரியவா! எங்களால அதை தாங்க முடியாது….” என்று அந்த அம்மா
பெரியவாளிடம் கதற ஆரம்பித்ததும், பெரியவாளை அவளுடைய கதறல் சங்கடப்படுத்துமோ
என்று மெல்ல ஒரு பாரிஷதர் அவளிடம் செல்ல முயன்றதும், விரலால் சைகை பண்ணி “அவள்
பேசட்டும். தொந்தரவு பண்ணாதே” என்று சொன்னார். மாமி பாட்டுக்கு புலம்பிக்
கொண்டிருந்தாள். அதே சமயம் பெரியவா தன் மௌனத்தை கலைக்காமல், பக்கத்தில்
தட்டில் இருந்து ஒரு ஆப்பிளைக் கையில் வைத்துக்கொண்டு இப்படியும் அப்படியுமாக
சில மந்த்ரங்களை ஜபித்தபடி உருட்டிக் கொண்டிருந்தார். அப்புறம், அதை ஒரு
தட்டில் வைத்து, அந்தத் தட்டை தன் இடது கையில் வைத்துக்கொண்டு, வலது கையால்
குங்குமத்தை எடுத்து அந்த ஆப்பிள் பழத்துக்கு குங்குமார்ச்சனை பண்ணத்
தொடங்கினார். ஆப்பிள் பழம் காமாக்ஷியானதோ என்னவோ! நமக்கென்ன தெரியும்?
பாட்டியின் அழுகை குறைந்து ஒரு புது நம்பிக்கை பிறந்தது!

ஆப்பிளைக் கையில் எடுத்துக்கொண்டு சில வினாடிகள் அதை உருட்டினார். “இந்தா!
வாங்கிக்கோ! ஒண்ணும் பயப்… டாதே! பேரன் பொழைச்சு வந்து நன்னா ஓடி
ஆடுவான்…..இந்த விபூதி குங்குமத்தை அவனுக்கு இட்டுடு…..” அவள் கைகளில்
பேரனின் உயிரை பிச்சையாகப் போட்டமாதிரி, ஆப்பிளையும் விபூதி குங்குமத்தையும்
குடுத்தார். பாட்டியின் அத்தனை துக்கமும் போன இடம் தெரியவில்லை! உடனேயே சென்னை
வந்தாள். I C U வில் யாரையுமே அனுமதிக்கவில்லை.குழந்தை நெற்றியில் எப்படியாவது
பெரியவா குடுத்த ப்ரசாதத்தை இட்டு விட வேண்டுமே! என்று அலைந்தாள். அவள் மனஸில்
இப்போது கலக்கமோ பயமோ இல்லை. “நிச்சயம் என் பேரன் நன்னா ஆயிடுவான் ” என்ற
நம்பிக்கை அசைக்கமுடியாமல் நின்றது. அதேசமயம் டக்கென்று I C U கதவு
திறந்ததும், பேரனை ஒரு ஸ்ட்ரெச்சரில் வைத்து வெளியே கொண்டு வந்தார்கள்.
வழக்கம்போல் டாக்டர்களும், நர்ஸுகளும் “கூட்டம் போடாதீங்க! ரொம்ப சீரியஸ் !
வழி விடுங்க!” போன்ற பயமுறுத்தல்களோடு வெளியே வந்தனர். ஒரே பாய்ச்சலில் பேரன்
பக்கம் போனாள்…..தெய்வமே! எங்கே விபூதி குங்குமம் இடுவது? நெற்றியே
தெரியாதபடி பெரிய கட்டு இருந்தது. எங்கோ லேசாக தெரிந்த இடத்தில் பெரியவாளை
வேண்டியபடி ப்ரசாதத்தை இட்டுவிட்டாள்!

இத்தனை நேரம் எப்படி இடுவது என்று கவலைப்பட்ட பாட்டி, பேரனின் முகத்தில்
வெளியே தெரிந்த ஏதோ ஒரு சின்ன இடத்தில் பெரியவாளுடைய ப்ரசாதத்தை இட்டதும்,
அப்பாடி! என்று அத்தனை கவலைகளையும் உதறித் தள்ளிவிட்டு அமர்ந்தாள். “இனிமே
என்னோட பேரன் பொழைச்சுக்குவான்”…….குழந்தையை ஸ்கேன் பண்ண கூட்டிக்கொண்டு
போய்விட்டார்கள். சற்றுநேரத்தில் டாக்டர் ரிப்போர்ட்டோடு வெளியே வந்ததும்,
அத்தனை பேரும் அவரை சூழ்ந்து கொண்டனர்….

“மெடிக்கல் மிராக்கிள்!” என்று “கண்டேன் சீதையை” மாதிரி சொல்லி, அத்தனை
பேருடைய வயிற்றிலும் பாலை வார்த்தார். இருக்காதா பின்னே? காலனை எட்டி உதைத்த
அம்ருதகடேசன் கையால் ப்ரஸாதம் வாங்கிக்கொண்ட குழந்தையை காலன் நெருங்குவானா?
டாக்டர் குழு தொடர்ந்தது……

“எப்டி சொல்றதுன்னே தெரியலே…முன்னாடி எடுத்த ஸ்கேன், இப்போ எடுத்த ஸ்கேன்
ரெண்டுக்கும் ஏகப்பட்ட வித்யாசம் இருக்கு…..ஆனா, nothing to worry
….சந்தோஷமா இருங்க. மொதல்ல எடுத்த ஸ்கேன்ல குழந்தையோட மூளை நரம்புகள்
எல்லாம் ஏகத்துக்கு damage ஆயிருந்தது. ஆனா, இப்போ எடுத்த ஸ்கேன்ல எல்லா
நரம்பும் ரொம்ப normal ஆ எப்டி இருக்கணுமோ, அப்டி இருக்கு. எங்க சர்வீஸ்ல
இப்படி ஒரு கேஸை நாங்க பாத்ததில்லை!”

பாட்டியால் தன் ஆனந்த பரவசத்தை, பெரியவாளுடைய மஹா காருண்யத்தை அதற்கு மேல்
அடக்கிக் கொள்ள முடியவில்லை.

“அப்டி சொல்லுங்கோ டாக்டர்! அதான் என்னோட பெரியவாளோட மஹிமை! அதான் இந்த ஸ்கேன்
ரிசல்டை ஒண்ணுமே இல்லாம பண்ணிடுத்து! மெடிகல் மிராகிள்ளாவுது!
மண்ணாங்கட்டியாவுது!” பெருமை கலந்த சந்தோஷத்தோடு சொன்னாள். காஞ்சிபுரம் சென்று
பெரியவா திருவடிகளில் நன்றியோடு விழுந்தாள்.

அடுத்த ஒரு வாரத்துக்குள் குழந்தைக்கு சில சின்ன சின்ன பிரச்சனைகள்
பாதித்தாலும், நல்ல முறையில் முழுசாக வீடு வந்து சேர்ந்தான்!

Advertisements
Published in: Uncategorized on November 27, 2014 at 6:13 am  Leave a Comment  

ஏண்டா, முகம் தொங்கிப் போச்சு?

 

homamperiyavar

பல வர்ஷங்களுக்கு முன்னால், ஒருமுறை நல்ல பனிக்காலம். பெரியவாளின் உதடுகள் ஒரே வெடிப்பாக வெடித்திருந்தது. பேசக்கூட முடியாமல் வேதனை இருந்தாலும் எதுவுமே காட்டிக்கொள்ளாமல் எப்போதும் போல வருபவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அம்மாதிரி உதடு வெடிக்கும்போது, அடிக்கடி வெண்ணை தடவிக் கொண்டே இருந்தால்,வெடிப்பு சரியாகிவிடும். ஆனால், பெரியவா கடைகளில் விற்கும் வெண்ணையை தடவிக் கொள்ள மாட்டார். என்ன பண்ணுவது?

ஒரு பாட்டி ரொம்ப அக்கறையோடு ஐந்து சேர் பசும்பால் வாங்கி, காய்ச்சி, உறைக்குத்தி தயிராக்கி அதை கடைந்து வெண்ணை எடுத்து, கொண்டுவந்து பெரியவாளிடம் குடுத்தாள்.

“பெரியவா…….ஒதடு ரொம்ப பாளம் பாளமா வெடிச்சிருக்கு. ரொம்ப மடியா வெண்ணை
கடைஞ்சு எடுத்துண்டு வந்திருக்கேன்…பெரியவா ஒதட்டுல தடவிக்கணும்”..என்று வினயத்தோடு ப்ரார்த்தனை பண்ணிக்கொண்டாள்.

பெரியவாளுக்கு வெண்ணையை கண்டதுமே தான் த்வாபர யுகத்தில் அடித்த கூத்து ஞாபகம் வந்துவிடுமாதலால், ரொம்ப சந்தோஷப்பட்டார். பெரியவா மட்டும் சந்தோஷப்படவில்லை…….இன்னொரு ஜோடிக் கண்களும் அந்த வெண்ணையை காதலோடு பார்த்தன!

அப்போது தர்சனத்துக்கு வந்திருந்த ஒரு சின்னக் குழந்தை ஓடிவந்து பெரியவாளிடம் வெண்ணைக்காக குஞ்சுக்கையை நீட்டியது! சாக்ஷாத் பால கோபாலனே கேட்டது போல் அங்கிருந்தவர்களுக்கு தோன்றியது. கேட்காமலேயே மோக்ஷபர்யந்தம் [தன்னையே] குடுத்துவிடும் அந்த மஹா மஹா மாதா அப்படியே அத்தனை வெண்ணையையும் தூக்கி அந்த குழந்தையிடம் குடுத்துவிட்டார்!

இதைப் பார்த்துக்கொண்டிருந்த பாரிஷதர்களுக்கு கொஞ்சம் முகம் சுருங்கியது! “ரொம்ப சரி…கொழந்தை கேட்டா, ஏதோ ஒரு எலுமிச்சங்காய் சைஸில் உருட்டிக் குடுத்தா போறாதா என்ன? அப்டியே டப்பாவோடயா தூக்கி குடுக்கணும்?.. இப்போ ஒதட்டுல தடவிக்க ஏது வெண்ணை?..”

அவர்கள் உள்ளத்துக்குள் ஓடிய எண்ணங்களுக்கு பதில் வந்தது……..

“ஏண்டா, முகம் தொங்கிப் போச்சு? கொழந்தை சாப்ட்டாலே என்னோட ஓதட்டு புண் செரியாப் போய்டும்…” சிரித்தார்.

அன்று சாயங்காலமே, பெரியவாளுடைய உதட்டில் எல்லா பாளம் பாளமான வெடிப்பும் சுத்தமாக போய்விட்டிருந்தது! வெண்ணை கேட்ட பாலகோபாலன் அதை சாப்பிட்டுவிட்டான் போலிருக்கிறது!

சரீரம் எதுவானால் என்ன? உள்ளிருக்கும் ஆத்மா ஒன்றுதானே?

Published in: Uncategorized on November 27, 2014 at 6:06 am  Leave a Comment  

படிக்கிற வயசா எனக்கு?

 

Him Ambal

பெரியவா இருந்த இடத்திலே இருந்து வெகு அருகில்தான் வரதராஜ பெருமாள் கோயில். அந்தக் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தபோது, பெரியவாளைத் தனியா வந்து அங்கே இருந்து யாரும் அழைச்சதா தெரியலே. அதையெல்லாம் பெரியவா எதிர்பார்க்கவும் மாட்டார். மாடவீதியிலேயே, உசரமான ஒரு வீட்டுத் திண்ணையில் ஏறி நின்றுகொண்டு, கோபுர தரிசனம் செய்தார். சந்நிதி தெரு சந்திக்கிற இடத்திலே ஜீயர் சுவாமிகள் இவரைப் பார்த்துவிட்டு, ”பெரியவா அவசியம் வந்து சேவிக்கணும்!” என்று கேட்டுக்கொண்டார். ஜீயர் கேட்டுக்கொண்டதற்காக, மறுபடியும் ஒருதடவை வந்து ஸ்வாமி தரிசனம் செய்துவிட்டுத்தான் போனார் பெரியவா.

பெரியவா காலையில் எப்போது வெளியே கிளம்புவார் என்று யாருக்கும் தெரியாது; நினைத்தாற் போலிருந்து, திடீரென்று புறப்பட்டுவிடுவார். நாம்தான் எதிர்பார்ப்போடு காத்திருக்க வேண்டும். ஒருநாள் விடியற்காலை 4 மணி இருக்கும். குள்ள சந்திரமௌலி படுத்துக்கொண்டிருந்தான். கதவு சாத்தியிருந்தது. பல் தேய்த்து சுத்தம் செய்துகொண்டுவிட்டுத் திரும்பி வந்து பார்த்தால், கதவு நன்றாகத் திறந்து கிடக்கிறது. பெரியவாளைக் காணோம்!

எல்லோருக்கும் ஒரே பயமாகப் போய்விட்டது. பாடசாலை வெங்கட்ராம சாஸ்திரி பேரன், ‘நான் போய்த் தேடிப் பார்த்துட்டு வரேன்’ என்று புறப்பட்டான். சாலையில் டிரெயினேஜ் குழாய்கள் போடுவதற்காகப் பள்ளம் தோண்டிப் போட்டிருந்தார்கள். அதிகாலை நேரம். கும்மிருட்டு. மேடும் பள்ளமுமாக வீதி ரொம்பவும் மோசமாக இருந்தது.

திரௌபதி அம்மன் கோயில் பக்கத்தில் பெரியவா நடந்து போய்க்கொண்டிருந்தார். வெள்ளையாக அகிம்ஸா பட்டு ஒன்றைப் போர்த்திக்கொண்டு, தண்டத்தை உள்ளே மறைத்துக்கொண்டு நடந்துகொண்டிருந்தார். பெரியவாதான் அது என்று ஓர் ஊகத்தில் தெரிய வந்ததும், அவன் அவரைத் தொடர்ந்து ஓடினான். வடக்கு மாட வீதியில்தான் அவரைப் பிடிக்க முடிந்தது. … அவர் நடை வேகத்துக்கு இணையாக நம்மால் எல்லாம் நடக்கவே முடியாது!

பெரியவாளுக்கு பள்ளம், மேடு எல்லாம் ஒன்றும் தெரியாது. கூடப்போகிறவர்தான் அவரை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். வேகமாக நடந்து சென்றுகொண்டிருந்த பெரியவா, மேடாக இருந்த ஓர் இடத்தில் கால் தடுக்கிவிடாமல் இருக்கவேண்டுமே என்பதற்காக, அருகிலே ஓடிய சாஸ்திரி பேரன் அவரை நெருங்கி, ‘பெரியவா, படி, படி!’ என்று எச்சரிக்கை செய்தான். திடீரென்று அவனைப் பார்த்த பெரியவா, ‘என்னடா நீ, இந்த வயசிலே போய் என்னைப் படி, படின்னு சொல்றியே… படிக்கிற வயசா எனக்கு?’ என்று குறும்பாகக் கேட்டார். பெரியவருக்கு நகைச்சுவை உணர்வு ரொம்பவே அதிகம்!’

 

Published in: Uncategorized on November 27, 2014 at 5:57 am  Leave a Comment  

ஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை?

 

MP02

ஒரு முறை வட நாட்டில் இருந்து ஓர் அன்பர் மஹபெரியவாளைததரிசிக்க வந்தார்.  மனம் குளிரும்வண்ணம் அவரது தரிசனம் முடிந்த பிறகு, சற்றே நெளிந்தவாறு நின்றார்.
இவரது மனதில் ஏதோ கேள்விஇழையோடுகிறது போலும் என்று தீர்மானித்த பெரியவா,
“என்ன சந்தேகம். கேளுங்கோ” என்றார்.
அந்த வட நாட்டு அன்பருக்கு ஆஞ்சநேயர் குறித்த ஒரு சந்தேகம் நெடு நாட்களாகவே இருந்து வந்தது.
இதுகுறித்துப் பலரிடமும் விளக்கம் கேட்டு விட்டார்.  ஆனால் எவரிடம் இருந்தும் சரியான பதில் வரவில்லை. அவர், அந்த சந்தேகத்தை மஹாபெரியவாளிடம்கேட்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த போதுதான், ஸ்வாமிகளேஉத்தரவு கொடுத்து விட்டார்.
“ஆஞ்சநேயரைப் பற்றி எனக்கு ஒரு சந்தேகம்…”  இழுத்தார் அன்பர்.
“வாயுபுத்திரனைப் பத்தியா… கேளேன்”  என்றார் ஸ்வாமிகள்.

“ஸ்வாமி..  ஆஞ்சநேயர் பலருக்கும் இஷ்ட தெய்வமாக இருக்கிறார்.  எல்லாருமே அவரை வணங்கி
அருள்பெறுகிறார்கள்.  ஆனால் அவருக்கு அணிவிக்கப்படும் மாலை பற்றித் தான் என் சந்தேகம்….”
பெரியவாமெளனமாக இருக்கவே… அன்பரே தொடர்ந்தார்:  “அனுமனுக்குத் தென்னிந்தியாவில் காரமானமிளகு கலந்த வடை மாலை சாற்றுகிறார்கள்.  ஆனால் நான்
வசிக்கும் வட இந்தியாவிலோ ஜாங்கிரி மாலைசாற்றுகிறார்கள்.  ஏன் இப்படி வித்தியாசப்படுகிறது ?”
பதிலுக்காக மஹபெரியவாளையேபார்த்துக் கொண்டிருந்தார் வட நாட்டில் இருந்து வந்த அன்பர்.
தன்னுடைய நீண்ட நாளைய சந்தேகத்துக்கு, பெரியவாளிடம்இருந்தாவது தகுந்த பதில் வருமா என்கிற
எதிர்பார்ப்பு அவரது முகத்தில் இருந்தது.கேள்வி கேட்ட வட நாட்டு அன்பர் மட்டுமல்ல… பெரியவா சொல்லப்
போகும் பதிலுக்காக அன்று அங்கு கூடிஇருந்த அனைவருமே ஆவலுடன் இருந்தனர்.
ஒரு புன்முறுவலுக்குப் பிறகு பெரியவாபதில் சொல்ல ஆரம்பித்தார்.

“பெரும்பாலோர் வீட்டில் கைக்குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம் செய்தால்,  வீட்டுக்கு வெளியே
குழந்தையை இடுப்பில் தூக்கிக் கொண்டு வந்து,‘அதோ பார் நிலா…’ என்று சந்திரனை அந்தக் குழந்தைக்கு வேடிக்கை காட்டி உணவை சாப்பிட வைப்பார்கள் பெண்கள்.  அழகான நிலாவையும் வெளிக்காற்றையும் சுவாசிக்க நேரும் குழந்தைகள் அடம் பண்ணாமல் சமர்த்தாக உணவை சாப்பிட்டு விடும் .  சம்பந்தப்பட்ட அம்மாக்களுக்கும் இது சந்தோஷத்தைத் தரும்.  உங்களில் பலர் வீடுகளிலும் இது நிகழ்ந்திருக்கும்.
சாதாரண குழந்தைகளுக்கு  நிலா விளையாட்டுப் பொருள் என்றால், ராமதூதனான அனுமனுக்கு சூரியன் விளையாட்டுப் பொருள் ஆனது.  அதுவும் எப்படி ?  பார்ப்பதற்கு ஏதோ ஒரு பழம் போல் காட்சி தந்த  சூரியனைஅடுத்த கணமே தன் கையில் பிடித்துச் சாப்பிட வேண்டும் என்று தீராத ஆசை ஏற்பட்டது  அனுமனுக்கு.

அனுமன் கைக்குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்தபோது வானத்தில் செக்கச்செவேல் என்று ஒரு பழம்போல்‘ஜிவுஜிவு’  என்று தோற்றமளித்த சூரியன்,  அவரை மிகவும் கவர்ந்து விட்டது.  மனித வாழ்க்கையின் ஜீவாதாரத்துக்குக் காரணமான சூரியனை,  சாப்பிடுவதற்கு உகந்த ஒரு பழம் என்று நினைத்து விட்டார் அனுமன்.  வாயுபுத்திரன் அல்லவா ?  அடுத்த கணமே அது தன் கையில் வந்து விட வேண்டும் என்று விரும்பினார்.  வாயு வேகத்தில் வானத்தில் பறந்தார்.  பிறந்து சில நாட்களே ஆன ஒரு
பச்சிளங்குழந்தை,சூரியனையே விழுங்குவதற்காக இப்படிப் பறந்து செல்வது கண்டு தேவர்கள் திகைத்தனர்.
வாயுபுத்திரனின் வேகத்தை எவராலும் தடுக்க முடியவில்லை.

 அதே நேரத்தில் ராகு கிரஹமும் சூரியனைப் பிடித்து கிரஹண காலத்தை உண்டுபண்ணுவதற்காக நகர்ந்து

கொண்டிருந்தது.  ஆனால், அனுமன் சென்ற வேகத்தில்  ராகு பகவானால் செல்ல முடியவில்லை.
சூரியனைப் பிடிப்பதற்காக நடந்த இந்த ரேசில் அனுமனிடம் ராகு பகவான் தோற்றுப் போனார்.  இந்த
நிகழ்ச்சியின் முடிவாக, அனுமனுக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தார் ராகு பகவான்.  அதாவது, தனக்கு
மிகவும்உகந்த தானியமான உளுந்தால் உணவுப் பண்டம் தயாரித்து எவர் ஒருவர் அனுமனை
வணங்குகிறாரோ ,அவரை எந்தக் காலத்திலும் தான் பீடிப்பதில்லை எனவும், தன்னால் வரும் தோஷங்கள்
அனைத்தும் நிவர்த்திஆகி விடும் எனவும் ராகு பகவான் அனுமனிடம் தெரிவித்தார்.  இந்த உணவுப் பண்டம்
எப்படி இருக்கவேண்டும் என்றும் ராகு பகவான் அனுமனிடம் சொன்னார்.  அதாவது தன் உடல் போல்
(பாம்பு போல்) வளைந்து இருக்க வேண்டும் எனவும் சொன்னார்.  அதைதான் உளுந்தினால் ஆன மாலைகளாகத் தயாரித்து
அனுமனுக்கு சமர்ப்பிக்கிறோம்.  ஆக, ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்  உளுந்து தானியத்தால்
ஆனவடை மாலைகளை அனுமனுக்குச் சார்த்தி வழிபட்டால்,  ராகு தோஷம் நிவர்த்தி ஆகி விடும் என்பது

இதில்இருந்து தெரிகிறது.

இப்போது மிளகு வடை மற்றும் ஜாங்கிரி விஷயத்துக்கு வருகிறேன்.

வடையாகட்டும்… ஜாங்கிரி ஆகட்டும்.  இரண்டுமே உளுந்தினால் செய்யப்பட்டவை தான். தென்னிந்தியாவில்
இருப்பவர்கள் அனுமனுக்கு உளுந்து வடை மாலை சாற்றுகிறார்கள்.  இங்கேஉப்பளங்கள் அதிகம் உள்ளன.
இங்கிருந்து பல வெளி நாடுகளுக்கும் உப்பு அதிக அளவில் ஏற்றுமதி ஆகிறது. ஆகவே, உப்பும் உளுந்தும்
கலந்து கூடவே மிளகும் சேர்த்து பாம்பின் உடல் போல் மாலையாகத் தயாரித்து,அனுமனுக்கு சார்த்தி
வழிபடும் வழக்கம் நம்மூரில் அதிகம் உண்டு.
வட இந்தியாவில் பல மாநிலங்களில் கரும்பு விளைச்சல் அமோகமாக இருக்கிறது.  சர்க்கரை பெருமளவில்
அங்கு உற்பத்தி ஆகி, வெளிநாடுகளுக்கெல்லாம் ஏற்றுமதி ஆகிறது.  தவிர, வட இந்தியர்கள் இனிப்புப்
பண்டங்களை அதிகம் விரும்பிச் சாப்பிடுபவர்கள்.   அதுவும், அவர்களுக்குக் காலை நேரத்திலேயே  —அதாவது பிரேக் ஃபாஸ்ட் வேளையில் இனிப்புப் பண்டங்களையும் ரெகுலர் டிஃபனோடு சேர்த்துக்
கொள்வார்கள்.  அவர்கள் இனிப்பு விரும்பிகள்.  எனவேதான், அவர்கள் உளுந்தினால் ஆன ஜாங்கிரி
மாலையை அனுமனுக்கு சாரதி வழிபடுகிறார்கள்.
எது எப்படியோ… அனுமனிடம் ராகு பகவான் கேட்டுக் கொண்டபடி உளுந்து மாலைகள் அனுமனுக்கு
விழுந்துகொண்டே இருக்கின்றன.  அது உப்பாக இருந்தால் என்ன… சர்க்கரையாக இருந்தால் என்ன..  மாலை
சார்த்திவழிபடும் பக்தர்களுக்கு ராகு தோஷம் தொலைந்து போனால் சரி”  என்று சொல்லி விட்டு, இடி
இடியெனச்சிரித்தார் மஹபெரியவா. பெரியவாளிவிளக்கமான இந்த பதிலைக் கேட்ட வட நாட்டு அன்பர்
முகத்தில் பரவசம். சடாரெனமகானினதிருப்பாதங்களுக்கு ஒரு நமஸ்காரம் செய்து தன் நன்றியைத்
தெரிவித்தார். கூடி இருந்த அநேகபக்தர்களும் பெரியவாளின்விளக்கத்தால் நெகிழ்ந்து போனார்கள்.

Published in: Uncategorized on November 27, 2014 at 5:50 am  Leave a Comment  

Mahaperiyavaa as Bala sanyasi

A very very rare photo of Mahaperiyavaa as Bala sanyasi.  Please be blessed to see him as a Sanyasi at such a tender age.

periyava as bala sanyasi
 May Paramacharya’s Blessings be showered on all.

 

Published in: Uncategorized on November 26, 2014 at 7:04 am  Leave a Comment  

Purest of purest devotion !

 

homamperiyavar

Mahaperiyavaa

Periyavaa’s devotion for Adi Sankara is purest of the purest and this incident happened in 1983 at Satara.

Indira Gandhi had a special liking for Periyavaa(pls see the next miracle too) and hence for 1983 Sankara Jayanthi,she wanted to release a stamp on Adi Sankara.She didnt want to release it without getting permission from Periyavaa and hence she had sent C.Subramaniam,who was the min of agriculture and an ardent devotee of Periyavaa all the way to Satara..Normally Periyavaa treats all as equal and when CS came
He enquired “why he had come?”
CS said he has come to take the permission for the Sankara Stamp to be released..
Periyavaa thought for a sec and asked him with a smile:
“Permission means you have already decided to release the stamp and you have come here for a formal information to me or  if ,I give an opinion ,that wd be binding on the govt!”
Cs said:”PM made it clear whatever Periyavaa says will be carried out(he was thinking that the stamp release wd meet with His approval!)”
Periyavaa:”If you ask me,I am against a stamp for Acharya..He is such a great avatar I dont want every one to lick His photo and paste in all the covers..His greatness can never ever diminish whether we mortals
(He inlcudes Himself too!)release a simple stamp or not.”
CS said:”I wd convey the same to PM”
Periyavaa:”incase she is keen on releasing or already made arrangements,it is her wish I have made ‘my wish’ because you have come all the way and asked for it..”
The stamp was never released by Indira Gandhi..
so much respect she had for Him..The reason is simple.

Published in: Uncategorized on February 3, 2014 at 5:38 am  Leave a Comment  

பெரியவாளின் சட்ட ஞானம்

“cy pres doctrine n. (see-pray doctrine) from French, meaning “as close as possible.” When a gift is made by will or trust (usually for charitable or educational purposes), and the named recipient of the gift does not exist, has dissolved, or no longer conducts the activity for which the gift is made, then the estate or trustee must make the gift to an organization which comes closest to fulfilling the purpose of the gift. Sometimes this results in heated court disputes in which a judge must determine the appropriate substitute to receive the gift. Example: dozens of local Societies for Protection of Cruelty to Animals contested for a gift which was made without designating which chapter would receive the benefits. The judge wisely divided up the money.”

 

ஜகத்குரு

ஜகத்குரு

ஏதோ ஓர் அறக்கட்டளையை கலைத்துவிட அதன் அறங்காவலர்கள் முடிவு செய்திருப்பதாகவும், அவர்கள் யாவரும் பெரியவாளின் பக்தர்களாகையால் அதன் சொத்துக்களை அவர் உயிரினும் பெரிதாக மதித்த வேதரக்ஷண நிதி ட்ரஸ்டுக்கு மாற்றி விட விரும்புவதாகவும் அவர்களில் ஒருவர் செய்தி கொண்டு வந்தார். அதற்கு ஸ்ரீ சரணருடைய அநுமதியும் அநுக்ரஹமும் வேண்டினார்.

ஸ்ரீ சரணர் பளிச்செனப் பதிலிறுத்தார்: “நீங்க ட்ரஸ்டீகளெல்லாரும் எங்கிட்ட பக்தியா இருக்கேன்னா போறுமா என்ன? ஒங்க பக்தியை, அபிமானத்தை மனஸார அங்கீகரிச்சுக்கறேன். ஆனாலும் ஒங்க ட்ரஸ்டோட ஆஸ்தி பாஸ்தியை வேதரக்ஷண நிதிக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்றதுன்னா, அதுக்குச் சட்டம் எடம் குடுத்தாதானே முடியும்? அந்த மாதிரிக் குடுக்கலியே! “ப்ரன்ஸிபள் அவ் ஸீப்ரே”ன்னு ’லா’வுல இருக்கு. அதன்படி, ஒரு டிரஸ்டைக் கலைக்கும்படி ஏற்பட்டா அதனோட சொத்துக்களை எந்த லக்ஷ்யத்துல அந்த ட்ரஸ்ட் ஆரம்பிச்சு நடத்துதோ, அதுக்கு ரொம்பக் கிட்டினதான ஒரு லக்ஷ்யத்தோட நடக்கற இ்ன்னொரு ட்ரஸ்டுக்குத்தான் மாத்த முடியும்.
ரொம்ப வித்யாஸமான லக்ஷ்யம் இருக்கிற ட்ரஸ்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ண முடியாது. இப்ப ஒங்க ட்ரஸ்டோட லக்ஷ்யமும் வேதரக்ஷணமும் வித்யாஸமானதுன்னுதான் எல்லாரும் அபிப்ராயப்படுவா.

ஒங்க ட்ரஸ்ட் ஸோஷல் ஸர்வீஸ் லக்ஷ்யத்துல ஏற்பட்டது. வேத ரக்ஷணத்தைவிடப் பெரிய சோஷல் ஸர்வீஸ் இல்லேன்னு எங்க மாதிரி சில பேர் வேணா சொல்லலாமே தவிர, அதைப் பொதுவா லோகம், கவர்மென்ட், கோர்ட் ஒத்துக்காது. ஆனதுனால், ஒங்க ஆசையைப் பூர்த்தி பண்ண முடியலியேன்னு எனக்கும் கஷ்டமாத்தான் இருக்குன்னாலும் அப்படித்தான் சட்டம் கட்டுப்படுத்தறது.
நீங்க இத்தனை அபிமானமா நெனச்சதே வேதரக்ஷண ட்ரஸ்டுக்குப் பணத்தைக் கொண்டு வந்து கொட்டும்! ஒங்க பணமும் ஒரு நல்ல சோஷல் சர்வீஸ் ஆர்கனைஸேஷனுக்குப் போய்ச் சேந்து நல்லபடியா  பிரயோஜனமாகணும்னு ப்ரார்த்திச்சுக்கறேன்”- அவருக்கே உரித்தான ஆழ்ந்த அநுதாபத்துடன் கூறி, அகம் குவித்துச் சிறிது நேரம் பிரார்த்திக்கிறார்.

அடுத்து அவரது மொழியியல் ஞானம், பன்மொழிப் புலமை ஆகியவற்றுக்கும் சான்று படைக்கிறார்.

” ‘ஸீப்ரே’-ன்னு சட்டப் பாயின்ட் சொன்னேனே, அதுக்கு ஸ்பெல்லிங்படி உச்சரி்ப்புப் பாத்தா ’ஸைப்ரஸ்’னு வரும். ஆனா அது ஃப்ரெஞ்ச் வார்த்தையானதால, அந்த பாஷையோட லக்ஷணப்படி ஸ்பெல்லிங் ஒரு தினுஸாவும், உச்சரிப்பு வேறே தினுஸாவும் இருக்கும். இந்த வார்த்தை ஸ்பெல்லிங்படி ’ஸைப்ரஸ்’ன்னு ஆகும்.ஆனாலும் ஸைப்ரஸ் தீவுக்குப் போடற ஸ்பெல்லிங் இல்லை. அந்தத் தீவுக்கு, C,Y,P,R,U,S-னு ஸ்பெல்லிங் போடறோம். ’ஸீப்ரே’க்கு C,Y, அப்புறம் ரெண்டு வார்த்தையை ஒண்ணா சேக்கறப்ப ஸந்தியிலே போடற ஹைஃபன், ஹைஃபனுக்கு அப்பறம் P,R,E..E, தான் U இல்லே: U போட்டா ஸைப்ரஸ் தீவுன்னு ஆயிடும்…E க்கு அப்புறம் கடைசி எழுத்தா S-(CY-PRES). அந்த ’S’ உச்சரிப்புல வராது. ’ஸைலன்ட்’ ஆயிடும்.

ஃப்ரெஞ்ச் பாஷைல ’ஸீ-ப்ரே-ன்னா ’ரொம்பக் கிட்டே”னு அர்த்தம். ஒரு ட்ரஸ்ட் சொத்தை தனோட லக்ஷ்யத்துக்கு ரொம்பவும் கிட்டினதான லக்ஷ்யமுள்ள இன்னொரு ட்ரஸ்டுக்குத்தான் மாத்தணும்னு தெரிவிக்கிறதால அந்த விதிக்கு அப்படிப் பேர்.”

What astounding knowledge? Will there ever be another like him?

Published in: Uncategorized on February 3, 2014 at 5:26 am  Leave a Comment  

Live telecast of Pradosham Pooja

நடமாடும் தெய்வம்

நடமாடும் தெய்வம்

Live Telecast (free of cost) of Pradosham Pooja at Sri Mahaswami Adhishtanam / Brindavanam and at Sri Periyava temple at Orikkai on all Pradosham day between 5 pm and 8 pm (IST) can be watched at www.srivigneshstudio.com

This is arranged by Sri Vigesh studio.

This is a great news for all of us – so many of us can watch the abishekam/puja on these auspicious day. I hope Vignesh Studio has made enough infrastructure arrangements to support 1000s of viewers…

Thank you Vignesh Studio for this great service that helps 1000s of elderly devotees who can’t physically go to Kanchipuram….

Jaya Jaya Sankara Hara Hara Sankara

Published in: Uncategorized on February 3, 2014 at 5:18 am  Leave a Comment  

பெரியவா தேடி சென்ற பாட்டி !!!

ஒரு அனுஷத்துக்கு மறுநாள் நிறைய பக்தர்கள் தர்சனம் பண்ண வந்தார்கள். அதில் ஒரு வயசான பாட்டி. பெரியவாளை பார்த்து “சர்வேஸ்வரா………..மஹாப்ரபு….” என்று கன்னத்தில் போட்டுக் கொண்டார்.

மஹா பெரியவா

மஹா பெரியவா

 

“எப்டி இருக்கான் ஒன் ஸ்வீகாரம்?………”

“ஏதோ இருக்கான்………” விட்டேத்தியாக பதில் வந்தது பாட்டியிடமிருந்து.

“வயசான காலத்ல ஒனக்கு பிடிப்பே இல்லேன்னியே?………அதான் ஒதவியா இருக்கட்டுமே…ன்னுதான் குடுத்தேன்” முகத்தில் சிரிப்பு!

பிடிப்பு இருக்கட்டும்…..ன்னு குடுத்தாராம்! சுற்றி இருந்தவர்கள் முகத்திலும் சிரிப்பு.

“சரி………ஒன் ஒடம்பு எப்டி இருக்கு?………”

“ஏதோ இருக்கேன்….பெரியவா அனுக்ரகம்…மழை பெஞ்சா, ஆத்துல முழுக்க ஒரேயடியா ஒழுகறது….அதை கொஞ்சம் சரி பண்ணிக் குடுத்தா, தேவலை பெரியவா”

என்னது? சுற்றி இருந்தவர்கள் அதிர்ந்தனர்! மோக்ஷத்தை தரவல்ல பராசக்தியிடம் எப்படிப் பட்ட விண்ணப்பம்!

“இந்த ஊர்ல மழையா ! காஞ்சிபுரந்தான் காஞ்சு போயிருக்கே!…….” மறுபடியும் கிண்டல் சிரிப்பு.

“இல்லையே….இப்போ ரெண்டு நாள் முன்னால பெஞ்ச மழைல கூட ஒழுகித்தே!…….”

“அப்டியா! சரி ஏற்பாடு பண்றேன்…..” பாட்டி நகர்ந்தாள். இத்தனை உரிமையோடு பெரியவாளிடம் பேசும் அந்த பாட்டி, எட்டு வயசில் திருமணமாகி விதவை ஆனவள். கணவர் வழியில் ஏராளமான சொத்து! ஒரு பெண்ணிடம் இத்தனை சொத்து இருக்க சொந்தக்காரர்கள் விடுவார்களா? அதே சமயம் தன்னிடம் வரவேண்டிய ஜீவன் ஒரு நாயாக இருந்தால் கூட பகவான் விட்டு வைப்பானா?

பெண்ணுக்கு விவரம் கொஞ்சம் நன்றாக தெரிந்திருந்ததால், சற்று சுதாரித்துக் கொண்டாள். காஞ்சிபுரத்துக்கு எதேச்சையாக வந்தவள், “தன் சொத்துக்கள் அத்தனையும் காமாக்ஷிக்கு!” என்று சொல்லிவிட்டாள். பெரியவா எவ்வளவோ மறுத்தும், கடைசியில் அந்த பெண்ணின் அன்பான பிடிவாதம் வென்றது. எனவே அவளுக்கு மடத்துக்கு சொந்தமான வீடு ஒன்றை தங்கிக்கொள்ள குடுத்துவிட்டார். அல்லும் பகலும் பெரியவாளை தர்சனம் பண்ணும் பாக்யம் ஒன்றே போதும் என்று பரம த்ருப்தியுடன், பணத்துக்கு துளியும் முக்யத்வம் குடுக்காத ஒரு ஆத்மாவை பெரியவா அல்லும் பகலும் ரக்ஷித்தார்.

பாட்டியோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவரிடம் சில பிரமுகர்கள் வந்து ஒரு தட்டில் ஏதே பத்திரிகையை வைத்தார்கள். சிரித்துக் கொண்டிருந்த முகம் சட்டென்று மாறியது…….

“என்னது இது?”

“காமாக்ஷி அம்மன் ப்ரம்மோத்சவ பத்திரிகை……….”

“கலெக்டருக்கு குடுத்தாச்சா?”

“குடுத்துட்டோம். பெரியவா”

“இவாளுக்கு?” என்று பக்கத்தில் அமர்ந்திருந்த மற்ற ரெண்டு பெரியவாளையும் காட்டி கேட்டார்.

“குடுத்தாச்சு. பெரியவா……”

“ஓஹோ…சரி. எல்லார்க்கும் குடுத்துட்டு, இவன் மடத்த விட்டு எங்கேயும் போக மாட்டான்….ன்னுட்டு கடேசில போனாப் போறதுன்னு எனக்கும் ஒரு பத்திரிகை கொண்டு வந்தேளாக்கும்?”

ருத்ர முகம்!

“இல்லை…..அது வந்து……பெரியவா” நிர்வாகிகள் எச்சில் கூட முழுங்க முடியாமல், கால்கள் நடுங்க நின்றனர்.

“………கேட்டுக்கோங்கோ! மடத்து சம்ப்ரதாயம்..ன்னு ஒண்ணு இருக்குன்னாவது தெரியுமோ? பத்திரிகை மொதல்ல எங்க தரதுன்னு தெரியுமோல்லியோ? எல்லா சம்பிரதாயத்தையும் மீறி நடந்துண்டா எப்டி? நீ எத்தனை வர்ஷமா இங்க இருக்கே?” குண்டுகளாக துளைத்தன! பெரியவா பத்திரிகையை தொடவே இல்லை! மடத்து நிர்வாகிகள் நடுங்கிப் போய்விட்டனர்.

ஆம். தவறுதானே?

“எப்டி வரணுமோ அப்டி வாங்கோ” திரும்பி நடந்தவர்களை, “ஒரு நிமிஷம் ……..” நிறுத்தினார்.

“நீ எங்கே குடியிருக்கே?”

“வடக்கு சன்னதிப் பக்கம் ஒரு ஆத்துல…….”

“அங்க வேற ரெண்டு மூணு வீடு இருந்ததே…”

“அங்க சுப்புராமன் இருக்கார்……”

பெரியவாளுக்கோ எந்தெந்த வீடு, யார் யார் இருக்கிறார்கள் எல்லாம் அத்துப்படி!

“சுப்புராமன்தான் மேல போயிட்டாரே……அவரோட வாரிசுகள் மடத்ல வேலை செய்யறாளா என்ன?”

“இல்லை……….”

“மடத்ல வேலை செய்யறவாளுக்குத்தான் நாம வீட்டை குடுத்திருக்கோம். இங்க வேலை செய்யாதவாளுக்கு எதுக்கு வீடு? நீ என்ன செய்வியோ, ஏது செய்வியோ எனக்கு தெரியாது! நாளைக்கு மறுநாள், இந்த பாட்டி அந்த வீட்டுக்கு குடி போகணும் !..டேய்! நாளன்னிக்கு நல்ல நாளா…ன்னு பாரு”

“ஆமா பெரியவா நல்ல நாள்தான்”

“அப்போ சரி. இந்த பாட்டி நாளன்னிக்கு அந்தாத்துக்கு போறதுக்கு ஏற்பாடு பண்ணிடுங்கோ”

பெரியவா சங்கல்பம் நிறைவேறியது!

இதற்கப்புறம் மூன்று மாசம் கழித்து காமாக்ஷி கோவிலில் தர்சனம் பண்ணிவிட்டு சன்னதி தெரு வழியாக நடந்து வந்து கொண்டிருந்த பெரியவா, சட்டென்று ஒரு வீட்டின் முன் நிற்கிறார்.

பின்னால் வந்து கொண்டிருந்த பக்தர் குழாம் குழம்பியது. ஒரு பக்தரிடம், ”ரெண்டு மூணு நாளா பாட்டியை காணும்…..உள்ள போய் பாரு. ஒடம்புக்கு கிடம்புக்கு முடியலையோ என்னவோ…..”

உள்ளே….ஏழ்மையான எளிமையான வாஸம். ஒரே ஒரு குமுட்டி அடுப்பு. ரெண்டே ரெண்டு பாத்ரம். வேறு எதையுமே காணோம். பாட்டி ஒரு ஓரத்தில் முடங்கிக் கிடக்கிறாள். பக்தர் மெதுவாக பாட்டியிடம் பெரியவா வாசலில் நிற்கும் விஷயத்தை சொன்னதுதான் தாமதம்! தடாலென்று எழுந்து, தன் நார்மடியை சரி பண்ணிக் கொண்டு ஓடோடி வருகிறாள்.

இரைந்து…….”சர்வேஸ்வர……மஹாப்ரபு…….நீயே என்னைத் தேடிண்டு வந்துட்டியா?” என்று அலறிக் கொண்டு பெரியவா பாதத்தில் விழுந்தாள். மூன்று முறை வலம் வந்து நமஸ்கரித்தாள். இதை உண்மையான பக்தனும் பகவானும் மட்டுமே அனுபவிக்க முடியும்.

தினம் தினம் ஆயிரக்கணக்கானோர் வந்து தர்சனம் பண்ணுகிறார்கள். ஆனால், தன்னிடம் ஆத்மார்த்தமாக ப்ரேமை பூண்டவர்கள் ஒரு நாள் பார்க்க வராவிட்டால், பகவானால் தாங்க முடியாமல், தானே அவர்களைப் பார்க்க வந்துவிடுவான். அந்த பாட்டிக்கு கிடைத்த பாக்யம் எல்லோருக்கும் கிடைக்குமா? தன்னையே பெரியவாளிடம் முழுவதுமாக அர்ப்பணித்தவர்களுகு மட்டுமே நிச்சயம் கிடைக்கும்.

Published in: on April 29, 2013 at 6:01 am  Leave a Comment  

ஸ்ரார்த்தம்

பெரியவா, இந்த காலத்திலேயும் இந்த திதி, ஸ்ரார்த்தம் இதெல்லாம் சரியா வருமா? – என்றார் அன்பர்.

ஒன் புள்ளே வெளியூர்ல ஹாஸ்டல் ல தங்கி படிக்கிறானே, அவனுக்கு மாசாமாசம் அரிசி, மளிகை எல்லாம் நீ கொண்டுபோய் கொடுத்துட்டு வரியோ? என்றது ‘அது’.

ஸ்ரீகாஞ்சிகாமகோடி ஜகத் குரு

ஸ்ரீகாஞ்சிகாமகோடி ஜகத் குரு

 

இல்லே பெரியவா.

அப்போ, நேரா போய், பணத்தை கொடுத்துட்டு வந்திடுவியோ?

இல்லே பெரியவா, இப்போ மணி ஆர்டர் ன்னு ஒன்னு வந்திருக்கே அதிலே அனுப்பிச்சிடுவேன்.

ஓ, அப்டியா, அப்டினா என்ன?

அதுக்கு போஸ்ட் ஆபிஸ் ல ஒரு பாரம் கொஞ்சம் காசு கொடுத்து வாங்கி, விவரங்கள் எல்லாம் பூர்த்தி பண்ணி, கொஞ்சம் கமிஷனோட கொடுத்தா, எம் புள்ளை படிக்கிற ஹாஸ்டல் ல அவாளே கொண்டு கொடுத்திடுவா.

ஒ, அப்டி எல்லாம் வந்துடுத்தா என்ன? எப்படி? நீ கொடுக்கற அதே ரூபா நோட்டை அவா அங்கே கொண்டு கொடுப்பாளா என்ன?

இதெல்லாம் இன்னும் தெரியாமல் இருக்காளே பெரியவா என்று நினைத்து தொடர்ந்தார் அவ்வன்பர்.

இல்லே பெரியவா, நாம்ப என்ன இங்கே கொடுக்கறமோ, அதே மதிப்புக்கு பணம் அங்கே கொடுப்பா.

சில சமயம் 100 ரூபாயா 5 கொடுப்பேன், சில சமயம் 50 ரூபாயா 10 கொடுப்பேன். அங்கே 500 ரூபா கொடுத்திடுவா.

அப்டியா? ஏண்டா? ஒரு போஸ்ட் ஆபிஸ்ல, முகம் தெரியாத ஒத்தர் கிட்ட நம்பிக்கை வெச்சு ஒரு பாரம் பூர்த்தி பண்ணி நீ கொடுக்கற பணம், தூர தேசத்திலே இருக்கற ஒன் புள்ளை கிட்ட போறதே,

அதே மாதிரி, விச்வே தேவன் உள்பட்ட அதிகாரிகள் வழியா நம் ரிஷிகள் வகுத்து கொடுத்த மந்திரங்கள் மூலமா நாம்ப ஸ்ரத்தையா கொடுக்கற இந்த வஸ்துக்களும் ஏன் பித்ரு லோகத்திலே இருக்கற உன் பித்ருக்களுக்கு போக கூடாது?

நிச்சயமா போகும்டா, ஸ்ரத்தையா பண்றது தான் ஸ்ரார்த்தம்.

நம்பிக்கை, நம்பிக்கை தாண்டா பிரதானம்.

ஒங்க பித்ருக்கள் ஆசிர்வாதம், க்ஷேமமா இருப்பே நீ என்று விடை கொடுத்தது அந்த புனிதம்.

Published in: on April 29, 2013 at 5:38 am  Comments (1)