தீபாவளியைக் கொண்டாடுவதன் தாத்பர்யம்”


 கண்ணன், நரகாசுர சம்ஹாரம் செய்ததைக் கண்டு, நரகாசுரனின் தாயாருக்கு துக்கம் பொங்கியது. என் பிள்ளை போய்விட்ட துக்கம் உண்டு. இருப்பினும் உலகத்தாருக்கு எந்த துக்கமும் வரக் கூடாது. இந்த நாளில், அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும்  என வேண்டினாள்!  “இந்த வேண்டு கோள்தான், தீபாவளிப் பண்டிகைக்கு தனிப்பெருமை சேர்ந்தது. நாம் துன்பப் பட்டாலும் பரவாயில்லை. உலகம் க்ஷேமமாக இருக்க வேண்டும் எனும் மனப்பான்மையை வள்ர்த்துக் கொள்வதுதான் தீபாவளியைக் கொண்டாடுவதன் தாத்பர்யம் என்று அருளியுள்ளார் ஸ்ரீ மகா ஸ்வாமிகள்.
 
 

நடமாடும் தெய்வம்

தீபாவளிக்கு மூன்று குளியல்:

* தீபாவளியன்று நமக்கு இருவிதமான குளியலை செய்யும்படி சாஸ்திரம் குறிப்பிடுகிறது. அன்று வெந்நீரில் அதிகாலைப் பொழுதில் ஓரு முகூர்த்த நேரம் கங்கை நதியே இருப்பதாக ஐதீகம். அதனால், அந்த நேரத்தில் எண்ணைய் ஸ்நானமாக வெந்நீரில் குளிக்க வேண்டும். அப்போது, நரகாசுரன், சத்திய பாமா, கிருஷ்ணர், பூமாதேவி நினைவு நமக்கு வரவெண்டும். இதற்கு கங்கா ஸ்நானம் என்று பெயர்.

* வெந்நீர் குளியலுக்குப்பின், சூரியன் உதிந்த பின், ஆறு நாழிகை நேரம் வரை, காவிரி உட்பட எல்லா புனித நதிகளும் குளிர்ந்த நீரில் இருப்பதாக ஐதீகம். ஆப்பொது, குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். இதற்கு, துலா ஸ்நானம்என்று பெயர். இரண்டாம் ஸ்நானத்தில் பரமேஸ்வரன் நினைவு வரவேண்டும்.

* வெளி உடம்பினை தூய்மையாக்கின பின், பெரிய ஸ்நானம் ஒன்றுண்டு. அதுதான் நம் உள் அழுக்கை எல்லாம் அகற்றும் கோவிந்தேதி ஸதா ஸ்நானம் அப்போது, நம் ஜீவன் தூய்மையாகிறது. பெரிய ஸ்நானம் என்று சொன்னதால், மற்ற இரண்டும் முக்கியமில்லை என்று எண்ணிவிடக்கூடாது. இந்த மூன்றுமே முக்கியம் தான் என்பதை உணர்ந்து, ஸ்நானம் செய்யுங்கள். 

 

ஸ்ரீ மகா ஸ்வாமிகள்

தீபாவளிப் பண்டிகையை பகவத் கீதையின் தம்பி என்பார் ஸ்ரீ காஞ்சி மகா ஸ்வாமிகள். கீதைகள் பல இருந்தாலும், பகவத் கீதை தனிப்பெருமைபெற்றதாக எப்படி உள்ளதோ, அதேபோல் பண்டிகைகள் பல இருப்பினும் தனிப் பெருமையுடன் திகழ்கிறது தீபாவளித் திருநாள்.

[ காஞ்சிப் பெரியவர்]

Advertisements
Published in: on December 21, 2009 at 9:10 am  Comments (2)  
Tags: , ,

The URI to TrackBack this entry is: https://rlalitha.wordpress.com/2009/12/21/%e0%ae%a4%e0%af%80%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%a9/trackback/

RSS feed for comments on this post.

2 CommentsLeave a comment

 1. ஜகத்குரு பரமாச்சாரியளைப் பார்க்கும்போது என் கண்களில் ஏன் நீர் பெருகுகிறது? அந்தப் பெரியவாளைப் பார்க்கும்போது 65 வயதான எனக்கு என் தாத்தாவை நேரில் பார்ப்பதுபோல் இருக்கிறதே, அது ஏன்? அந்த தெய்வம் இன்று என்முன் தோன்றி, என்னை ஆசீர்வதிக்குமா? …….இப்படி ஏங்கித் தவிக்கும் முத்து

  • முத்து ஐயருக்கு என் வணக்கங்கள்.

   உங்களின் பதிலைப் படித்தவுடன் எனக்கு மிக்க சங்கடமாக இருக்கிறது. வயதில் நான் சின்னவளாக இருந்தாலும், ஒன்றுமட்டும் என்னால் உறுதியுடன் கூற முடியும்….பரமாச்சாரியார்
   உங்களுடனும், எல்லோருடனும் ஒருதுணையாக எப்பொழுதும் இருப்பார். அவருடைய ஆசிகள் எப்பொழுதும் மக்களுக்கு உண்டு. இதில் எந்த சந்தேகமும் இல்லை. மனதைத் தளர விட வேண்டாம்.

   இப்படிக்கு,

   லலிதா ராமசந்திரன்


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: