ஸ்ரார்த்தம் -சில விதிமுறைகள்[Part-1]


ஸ்ரீ பரமாச்சாரியார் கூறியபடி – ஸ்ரார்த்தம் -சில விதிமுறைகள் – இதோ உங்களுக்காக…

ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத் குரு

ஒவ்வொரு சாஸ்திரத்தை ஏற்படுத்தியவருக்கும் ஆச்சாரியர் என்று பெயர்.  ஆச்சாரியர் என்பவர் சாஸ்திர அர்த்தங்களை பிறருக்கு விளக்கிக் கூறி, தானும் அவைகளின்படி செயல்பட்டு மற்றவர்களையும் அந்த ஆசாரங்களில் நிலை நிற்கச் செய்பவர்.

நம்முடைய கர்மாக்களை கடவுளுக்கு அர்பணம் செய்வதன் மூலம் சித்த சுத்தி ஏற்பட்டு, வாழ்க்கையின் ஒரே குறிக்கோளான கடவுளை அறிவதற்கு வழி காணலாம்.

முன்னோர்களுக்கு குறிப்பிட்ட திதி, அமாவாசை நாட்களில் தீர்த்தக்கரையில் ஸ்ரார்த்தம் செய்வார்கள். காரணமில்லாமல் எந்த வழிபாட்டையும் நம் முன்னோர் உருவாக்கவில்லை. இது ஸ்ரத்தை என்ற சொல்லில் இருந்து உருவானது. தந்தையை நினைவு கூர்ந்து ஒரு மகன் இதைச் செய்கிறான். இதை அவனுடைய மகன் பார்க்கிறான். ஓ… நம் தந்தை அவரது தந்தையை இறந்த பிறகும் மதிக்கிறார். அப்படியானால் உயிரோடிருக்கும் இவரை எந்தளவுக்கு மதிக்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு தோன்றும். இதனால் குடும்பம் ஒற்றுமையாக இருக்கும்.

ஸ்ரார்த்தம் என்ற வார்த்தைக்கு சிரத்தையுடன் மன ஒருமை பாட்டுடன் செய்யும் காரியம் என்பது பொருளாகும்.  சிராத்தம் என்பது முன்னொர்களை வழிபடல், முதியோரை மதித்தல், தன் பிறவிக்கும், வம்சத்திற்கும் முதல்வர்கள் ஆனவர்களைப் போற்றுதல் — இது ஸ்ராத்தம் என்பதற்கான வெளிப்படையான பொருள். 

ஆர்வமில்லாமல் செய்யப்படும் எதுவும் அது தவமாக இருந்தாலும் கூட எந்த பயணும் இல்லை என்று கீதை சொல்லுவதும் சிராத்ததின் முக்கியதுவத்தை உணர்ந்தேயாகும்.

நன்மை தரக்கூடிய ஸ்ரார்த்தம் தர்பபணம் முதலிய பித்ரு காரியங்கள் யாரை உத்தேசித்து செய்கிறோமோ அவர் பித்ரு உலகில் இருக்கலாம். அல்லது தேவ உலகில் இருக்கலாம்.  ஏன் மனித உலகில் நமக்கு பக்கத்திலலேயே கூட இருக்கலாம். 

அவர்களின் நிலை தாழ்ந்ததாகவோ உயர்ந்ததாகவோ இருக்கலாம்.நமது முன்னோர்களான அவர்களுக்கு நம்மால் செய்யப்படும் சிரார்த்தம் அவர் உயர்ந்த நிலையில் இருந்தால் ஆசியாக நமக்கு கிடைக்கும்.  தாழ்ந்த நிலையில் இருந்தால் அவரின் நிலை உயர உதவும்.

மறுபிறப்பு எடுத்திருந்தால் அவர்களின் இக உலக துன்பம் தீர உதவும். அதாவது, பித்ரு காரியங்களை ஒவ்வொருவரும் செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறார்.  ஆயுள் முடிந்து போன நமது முன்னோர்கள் பரவுலகத்தில் அல்லது பித்ரு உலகத்தில் வாழ்கிறார்கள். 

அவர்கள் வசு மித்திரர்கள் ஆதித்யர்கள் என்ற பிரிவில் அடங்குவார்கள். உடல் அழிந்தாலும் பிரேத நிலையில் குறிப்பிட்ட காலம் இருந்து தங்களது வாரிசுகள் செய்யும் நற்கர்மங்களால் பிரேத தோஷம் நீங்கப் பெற்று தங்களது பூரண அன்பையும் நம் மீது காட்டலாம். 

இறந்து போன ஒருவருக்காக அவரது மைந்தன், பேரன், சகோதரன் முதலானோர்களும் அவர்களின் சுய கோத்திரத்தில் பிறந்த ஏழு தலைமுறையினரும் கோத்திரம் மாறிய பெண் வழி வாரிசுகளும் சிரர்த்தம் செய்யலாம்.

நித்தியம், நைநித்தியம், காமிகம் என சிரர்த்தம் மூவகைப்படும்

மாத அம்மாவாசையில் செய்கின்ற தர்ஸ்ர சிரர்த்தம், மகாளய பட்சத்தில் செய்யும் ஆத்திக, பிராத்தாதி ஸ்ரர்த்தம், தினசரி செய்கின்ற பிரம்ம யக்ஷ தேவர்ஷ, பித்ரு தர்ப்பண பித்ரு க்ரியம் முதலியவை நித்ய ஸ்ரார்த்த வகையாகும்.

மாத பிறப்பு, கிரகணம் முதலிய புண்ணிய காலங்களில் செய்கின்ற தர்ப்பணம், விவாகம் மற்றும் சுப காரியம் நிகழும் போது செய்யப்படும் மாத்திமுக ஸ்ரார்த்தம், சௌவுடிக கரணத்தன்று செய்யும் ரகோத்தரம் பார்வன சிரார்த்தம், பூன மாசி, காணு மாசிகங்கள் சோத கும்பக முதலியவைகள் நைநித்திக சிரர்த்தம் ஆகும். 

வருடப்பிறப்பு, புனித யாத்திரை, புண்ணிய தீர்த்த கரைகள் போன்றவற்றில் செய்யப்படுவது காமிக சிரர்த்தமாகும்.

நாம் செய்யும் ஸ்ரார்த்தத்தின் ஆத்ம அர்ப்பணிப்பை அஷ்ட வசுக்கள் ஏகாதச ருத்தரர்கள் துவாதச ஆதித்தர்கள் போன்ற தெய்வங்கள் நமது முன்னோர்களிடத்தில் கொண்டு சேர்க்கிறார்கள்.

ஸ்ரர்த்தம் செய்வதற்கு இறப்பு ஏற்பட்ட நேரத்தில் நடைமுறையில் இருந்த திதி மிகவும் முக்கியம். 

திதி மறந்து விட்டால் தேய்பிறை கால அஷ்டமி, ஏகாதசி, அமாவாஸ்யை போன்ற நேரங்களில் செய்யலாம். 

 இல்லையென்றால் கன்னியாராசியில் சூரியன் முளையும் நேரத்தில் தேய்பிறை பொழுதை மகாளயபட்சம் என அழைக்கிறார்கள்.  அன்றும் செய்யலாம். 

 இந்த நாளில் பிதுர் உலக வாசிகள் பூமிக்கு வருவதாக ஐதீகம் உள்ளது.

முறைப்படியான ஸ்ரார்த்தங்களை செய்து வந்தாலும் மகாளயபட்ச ஸ்ரார்த்தம் செய்வது மிகவும் சிறப்பாகும். 

பல கால சூழலால் புரோகிதர்களை வைத்து அந்த பொழுதில் ஸ்ரார்த்தம் செய்ய இயலாத நிலை இருந்தால் முன்னோர்களை ஆத்மார்த்தமாக மனதில் பிராத்தனை செய்து நீர்நிலைகளில் உள்ள மீன்களுக்கு அன்னமோ ஒரு படி பொரியோ அர்ப்பணித்தால் கூட அதை நமது தென்புலத்தாராகிய முன்னோர்கள் மனமகிழ்வோடு ஏற்று கொள்கிறார்கள். 

ஆனால் செத்தவர்களை நினைத்து என்ன ஆக போகிறது என்று பலர் ஸ்ரார்த்தத்தை அசட்டை செய்கிறார்கள். இது நன்றி கெட்டதனம்.

சிலர், தாத்தா சொத்து மட்டும் வேண்டும், ஆனால் ஸ்ரார்த்தம் செய்யமாட்டேன் என்கிறார்கள். அது தவறுதான். எப்படி ஒரு சாட்டிலைட் மூலமாக நாம் தொலைகாட்சி பெட்டிகளின் அலைவரிசையை இயக்குவது போல் நாமும் முன்னோர்கள் என்ற சாட்டிலைட் மூலமாக நாம் நம் வம்சத்தை அழகாக டூன் செய்யும்போது எந்த வித பாதிப்பும் வராமல் இருக்கும் ஸ்ரார்த்தம் செய்யும்போது. இதை மாசா மாசம் தர்ப்பணம், வருடத்திற்கு திவசம் செய்யும்போது நம் மனதும் அவர்களை நினைத்து வழிபடும்போது, அவர்கள் கூடவே இருப்பது போல் ஒரு உணர்வு ஏற்படும். இதை வியாபார நோக்கோடு செய்யாமல், உணர்வு சம்பந்தமானது என்று புரிந்து செயல் பட்டால் அதுவே நம் முன்னோர்களின் ஆசிர்வாதமாக இருக்கும். 


[ தொடரும்]

Advertisements
Published in: on September 27, 2011 at 9:26 am  Leave a Comment  

The URI to TrackBack this entry is: https://rlalitha.wordpress.com/2011/09/27/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1/trackback/

RSS feed for comments on this post.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: