பெரியவா தேடி சென்ற பாட்டி !!!

ஒரு அனுஷத்துக்கு மறுநாள் நிறைய பக்தர்கள் தர்சனம் பண்ண வந்தார்கள். அதில் ஒரு வயசான பாட்டி. பெரியவாளை பார்த்து “சர்வேஸ்வரா………..மஹாப்ரபு….” என்று கன்னத்தில் போட்டுக் கொண்டார்.

மஹா பெரியவா

மஹா பெரியவா

 

“எப்டி இருக்கான் ஒன் ஸ்வீகாரம்?………”

“ஏதோ இருக்கான்………” விட்டேத்தியாக பதில் வந்தது பாட்டியிடமிருந்து.

“வயசான காலத்ல ஒனக்கு பிடிப்பே இல்லேன்னியே?………அதான் ஒதவியா இருக்கட்டுமே…ன்னுதான் குடுத்தேன்” முகத்தில் சிரிப்பு!

பிடிப்பு இருக்கட்டும்…..ன்னு குடுத்தாராம்! சுற்றி இருந்தவர்கள் முகத்திலும் சிரிப்பு.

“சரி………ஒன் ஒடம்பு எப்டி இருக்கு?………”

“ஏதோ இருக்கேன்….பெரியவா அனுக்ரகம்…மழை பெஞ்சா, ஆத்துல முழுக்க ஒரேயடியா ஒழுகறது….அதை கொஞ்சம் சரி பண்ணிக் குடுத்தா, தேவலை பெரியவா”

என்னது? சுற்றி இருந்தவர்கள் அதிர்ந்தனர்! மோக்ஷத்தை தரவல்ல பராசக்தியிடம் எப்படிப் பட்ட விண்ணப்பம்!

“இந்த ஊர்ல மழையா ! காஞ்சிபுரந்தான் காஞ்சு போயிருக்கே!…….” மறுபடியும் கிண்டல் சிரிப்பு.

“இல்லையே….இப்போ ரெண்டு நாள் முன்னால பெஞ்ச மழைல கூட ஒழுகித்தே!…….”

“அப்டியா! சரி ஏற்பாடு பண்றேன்…..” பாட்டி நகர்ந்தாள். இத்தனை உரிமையோடு பெரியவாளிடம் பேசும் அந்த பாட்டி, எட்டு வயசில் திருமணமாகி விதவை ஆனவள். கணவர் வழியில் ஏராளமான சொத்து! ஒரு பெண்ணிடம் இத்தனை சொத்து இருக்க சொந்தக்காரர்கள் விடுவார்களா? அதே சமயம் தன்னிடம் வரவேண்டிய ஜீவன் ஒரு நாயாக இருந்தால் கூட பகவான் விட்டு வைப்பானா?

பெண்ணுக்கு விவரம் கொஞ்சம் நன்றாக தெரிந்திருந்ததால், சற்று சுதாரித்துக் கொண்டாள். காஞ்சிபுரத்துக்கு எதேச்சையாக வந்தவள், “தன் சொத்துக்கள் அத்தனையும் காமாக்ஷிக்கு!” என்று சொல்லிவிட்டாள். பெரியவா எவ்வளவோ மறுத்தும், கடைசியில் அந்த பெண்ணின் அன்பான பிடிவாதம் வென்றது. எனவே அவளுக்கு மடத்துக்கு சொந்தமான வீடு ஒன்றை தங்கிக்கொள்ள குடுத்துவிட்டார். அல்லும் பகலும் பெரியவாளை தர்சனம் பண்ணும் பாக்யம் ஒன்றே போதும் என்று பரம த்ருப்தியுடன், பணத்துக்கு துளியும் முக்யத்வம் குடுக்காத ஒரு ஆத்மாவை பெரியவா அல்லும் பகலும் ரக்ஷித்தார்.

பாட்டியோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவரிடம் சில பிரமுகர்கள் வந்து ஒரு தட்டில் ஏதே பத்திரிகையை வைத்தார்கள். சிரித்துக் கொண்டிருந்த முகம் சட்டென்று மாறியது…….

“என்னது இது?”

“காமாக்ஷி அம்மன் ப்ரம்மோத்சவ பத்திரிகை……….”

“கலெக்டருக்கு குடுத்தாச்சா?”

“குடுத்துட்டோம். பெரியவா”

“இவாளுக்கு?” என்று பக்கத்தில் அமர்ந்திருந்த மற்ற ரெண்டு பெரியவாளையும் காட்டி கேட்டார்.

“குடுத்தாச்சு. பெரியவா……”

“ஓஹோ…சரி. எல்லார்க்கும் குடுத்துட்டு, இவன் மடத்த விட்டு எங்கேயும் போக மாட்டான்….ன்னுட்டு கடேசில போனாப் போறதுன்னு எனக்கும் ஒரு பத்திரிகை கொண்டு வந்தேளாக்கும்?”

ருத்ர முகம்!

“இல்லை…..அது வந்து……பெரியவா” நிர்வாகிகள் எச்சில் கூட முழுங்க முடியாமல், கால்கள் நடுங்க நின்றனர்.

“………கேட்டுக்கோங்கோ! மடத்து சம்ப்ரதாயம்..ன்னு ஒண்ணு இருக்குன்னாவது தெரியுமோ? பத்திரிகை மொதல்ல எங்க தரதுன்னு தெரியுமோல்லியோ? எல்லா சம்பிரதாயத்தையும் மீறி நடந்துண்டா எப்டி? நீ எத்தனை வர்ஷமா இங்க இருக்கே?” குண்டுகளாக துளைத்தன! பெரியவா பத்திரிகையை தொடவே இல்லை! மடத்து நிர்வாகிகள் நடுங்கிப் போய்விட்டனர்.

ஆம். தவறுதானே?

“எப்டி வரணுமோ அப்டி வாங்கோ” திரும்பி நடந்தவர்களை, “ஒரு நிமிஷம் ……..” நிறுத்தினார்.

“நீ எங்கே குடியிருக்கே?”

“வடக்கு சன்னதிப் பக்கம் ஒரு ஆத்துல…….”

“அங்க வேற ரெண்டு மூணு வீடு இருந்ததே…”

“அங்க சுப்புராமன் இருக்கார்……”

பெரியவாளுக்கோ எந்தெந்த வீடு, யார் யார் இருக்கிறார்கள் எல்லாம் அத்துப்படி!

“சுப்புராமன்தான் மேல போயிட்டாரே……அவரோட வாரிசுகள் மடத்ல வேலை செய்யறாளா என்ன?”

“இல்லை……….”

“மடத்ல வேலை செய்யறவாளுக்குத்தான் நாம வீட்டை குடுத்திருக்கோம். இங்க வேலை செய்யாதவாளுக்கு எதுக்கு வீடு? நீ என்ன செய்வியோ, ஏது செய்வியோ எனக்கு தெரியாது! நாளைக்கு மறுநாள், இந்த பாட்டி அந்த வீட்டுக்கு குடி போகணும் !..டேய்! நாளன்னிக்கு நல்ல நாளா…ன்னு பாரு”

“ஆமா பெரியவா நல்ல நாள்தான்”

“அப்போ சரி. இந்த பாட்டி நாளன்னிக்கு அந்தாத்துக்கு போறதுக்கு ஏற்பாடு பண்ணிடுங்கோ”

பெரியவா சங்கல்பம் நிறைவேறியது!

இதற்கப்புறம் மூன்று மாசம் கழித்து காமாக்ஷி கோவிலில் தர்சனம் பண்ணிவிட்டு சன்னதி தெரு வழியாக நடந்து வந்து கொண்டிருந்த பெரியவா, சட்டென்று ஒரு வீட்டின் முன் நிற்கிறார்.

பின்னால் வந்து கொண்டிருந்த பக்தர் குழாம் குழம்பியது. ஒரு பக்தரிடம், ”ரெண்டு மூணு நாளா பாட்டியை காணும்…..உள்ள போய் பாரு. ஒடம்புக்கு கிடம்புக்கு முடியலையோ என்னவோ…..”

உள்ளே….ஏழ்மையான எளிமையான வாஸம். ஒரே ஒரு குமுட்டி அடுப்பு. ரெண்டே ரெண்டு பாத்ரம். வேறு எதையுமே காணோம். பாட்டி ஒரு ஓரத்தில் முடங்கிக் கிடக்கிறாள். பக்தர் மெதுவாக பாட்டியிடம் பெரியவா வாசலில் நிற்கும் விஷயத்தை சொன்னதுதான் தாமதம்! தடாலென்று எழுந்து, தன் நார்மடியை சரி பண்ணிக் கொண்டு ஓடோடி வருகிறாள்.

இரைந்து…….”சர்வேஸ்வர……மஹாப்ரபு…….நீயே என்னைத் தேடிண்டு வந்துட்டியா?” என்று அலறிக் கொண்டு பெரியவா பாதத்தில் விழுந்தாள். மூன்று முறை வலம் வந்து நமஸ்கரித்தாள். இதை உண்மையான பக்தனும் பகவானும் மட்டுமே அனுபவிக்க முடியும்.

தினம் தினம் ஆயிரக்கணக்கானோர் வந்து தர்சனம் பண்ணுகிறார்கள். ஆனால், தன்னிடம் ஆத்மார்த்தமாக ப்ரேமை பூண்டவர்கள் ஒரு நாள் பார்க்க வராவிட்டால், பகவானால் தாங்க முடியாமல், தானே அவர்களைப் பார்க்க வந்துவிடுவான். அந்த பாட்டிக்கு கிடைத்த பாக்யம் எல்லோருக்கும் கிடைக்குமா? தன்னையே பெரியவாளிடம் முழுவதுமாக அர்ப்பணித்தவர்களுகு மட்டுமே நிச்சயம் கிடைக்கும்.

Advertisements
Published in: on April 29, 2013 at 6:01 am  Leave a Comment  

ஸ்ரார்த்தம்

பெரியவா, இந்த காலத்திலேயும் இந்த திதி, ஸ்ரார்த்தம் இதெல்லாம் சரியா வருமா? – என்றார் அன்பர்.

ஒன் புள்ளே வெளியூர்ல ஹாஸ்டல் ல தங்கி படிக்கிறானே, அவனுக்கு மாசாமாசம் அரிசி, மளிகை எல்லாம் நீ கொண்டுபோய் கொடுத்துட்டு வரியோ? என்றது ‘அது’.

ஸ்ரீகாஞ்சிகாமகோடி ஜகத் குரு

ஸ்ரீகாஞ்சிகாமகோடி ஜகத் குரு

 

இல்லே பெரியவா.

அப்போ, நேரா போய், பணத்தை கொடுத்துட்டு வந்திடுவியோ?

இல்லே பெரியவா, இப்போ மணி ஆர்டர் ன்னு ஒன்னு வந்திருக்கே அதிலே அனுப்பிச்சிடுவேன்.

ஓ, அப்டியா, அப்டினா என்ன?

அதுக்கு போஸ்ட் ஆபிஸ் ல ஒரு பாரம் கொஞ்சம் காசு கொடுத்து வாங்கி, விவரங்கள் எல்லாம் பூர்த்தி பண்ணி, கொஞ்சம் கமிஷனோட கொடுத்தா, எம் புள்ளை படிக்கிற ஹாஸ்டல் ல அவாளே கொண்டு கொடுத்திடுவா.

ஒ, அப்டி எல்லாம் வந்துடுத்தா என்ன? எப்படி? நீ கொடுக்கற அதே ரூபா நோட்டை அவா அங்கே கொண்டு கொடுப்பாளா என்ன?

இதெல்லாம் இன்னும் தெரியாமல் இருக்காளே பெரியவா என்று நினைத்து தொடர்ந்தார் அவ்வன்பர்.

இல்லே பெரியவா, நாம்ப என்ன இங்கே கொடுக்கறமோ, அதே மதிப்புக்கு பணம் அங்கே கொடுப்பா.

சில சமயம் 100 ரூபாயா 5 கொடுப்பேன், சில சமயம் 50 ரூபாயா 10 கொடுப்பேன். அங்கே 500 ரூபா கொடுத்திடுவா.

அப்டியா? ஏண்டா? ஒரு போஸ்ட் ஆபிஸ்ல, முகம் தெரியாத ஒத்தர் கிட்ட நம்பிக்கை வெச்சு ஒரு பாரம் பூர்த்தி பண்ணி நீ கொடுக்கற பணம், தூர தேசத்திலே இருக்கற ஒன் புள்ளை கிட்ட போறதே,

அதே மாதிரி, விச்வே தேவன் உள்பட்ட அதிகாரிகள் வழியா நம் ரிஷிகள் வகுத்து கொடுத்த மந்திரங்கள் மூலமா நாம்ப ஸ்ரத்தையா கொடுக்கற இந்த வஸ்துக்களும் ஏன் பித்ரு லோகத்திலே இருக்கற உன் பித்ருக்களுக்கு போக கூடாது?

நிச்சயமா போகும்டா, ஸ்ரத்தையா பண்றது தான் ஸ்ரார்த்தம்.

நம்பிக்கை, நம்பிக்கை தாண்டா பிரதானம்.

ஒங்க பித்ருக்கள் ஆசிர்வாதம், க்ஷேமமா இருப்பே நீ என்று விடை கொடுத்தது அந்த புனிதம்.

Published in: on April 29, 2013 at 5:38 am  Comments (1)  

காஞ்சி மடத்தில் நடந்த நிகழ்ச்சி

இந்தச் சம்பவம் காஞ்சி மடத்தில் நடந்த நிகழ்ச்சி.

மகா பெரியவர் காலையில் எழுந்தவுடன் பசுவை
தரிசிப்பது வழக்கம். பசுமாடுகள் கட்டியிருந்த
கொட்டகை ஒன்றில் மகான் அமர்ந்து மாலை
வேளைகளில் உரையாடுவது வழக்கம்.சுற்றியிருக்கும்
மக்களைக் கொசுக்கள் பிடுங்கி எடுக்கும்.மகான்
மட்டும் எதைப் பற்றியும் சிந்திக்காமல், தான் சொல்ல
வேண்டியதை மட்டும் சொல்லிக்கொண்டே இருப்பார்.

 

ஞானகுரு

ஞானகுரு

அந்தக் கொட்டகையில் உள்ள ஒரு பசு நிறைமாத
கர்ப்பிணியாக இருந்தது. பேறுகாலம்.அதனால் பசு
வேதனைப்பட்டுக்கொண்டே இருந்ததே தவிர,அதனால்
கன்றை ஈன்றெடுக்க முடியவில்லை.வைத்தியர்கள்
வரவழைக்கப்பட்டனர்.கால்நடைத் துறையில் சிறந்து
விளங்கும் டாக்டர்கள் அவர்கள்; ஒருவர் அல்ல..
காஞ்சிமகான் மடம் என்பதால் ஆறுபேர் வந்திருந்தனர்.

பசுவை நன்றாகப் பரிசோதித்துப் பார்த்த அவர்கள், பசு
ஏன் இன்னமும் பிரசவிக்கவில்லை என்கிற காரணத்தைக்
கண்டு பிடித்தனர். கன்றுக்குட்டி வயிற்றுக்குள் இறந்து
போயிருந்தது. அதை வெளியே எடுக்காவிட்டால்
பசுவும் இறந்துவிடும். அந்த ஆறுபேரும் ஏகோபித்து
சொன்ன முடிவு அது. இதைக் கேட்ட நிர்வாகிகள்
நேராக மகானிடம் போய் மெதுவாக விஷயத்தைச்
சொன்னார்கள்.

தன் இருக்கையை விட்டு எழுந்த அவர், நேராக பசு
இருந்த கொட்டகைக்கு வந்தார். பசுவின் எதிரே
அமர்ந்தார். அவரது பார்வை வேறு பக்கம் திரும்பவே
இல்லை.கன்று வயிற்றுக்குள் இறந்து போயிற்று என்று
ஏகோபித்த முடிவாகச் சொன்ன டாக்டர்கள் ஒருபக்கமா
நின்று, மகானையும், பசுவையும் மாறிமாறிப் பார்த்துக்
கொண்டே இருந்தார்கள். இப்படியும் அப்படியுமாக
நிலைகொள்ளாமல் தடுமாறிக் கொண்டிருந்த பசு…..
ஓர் இடத்தில் நின்றது. சற்று நேரத்தில் அதன் வயிற்றில்
இருந்த கன்றுக்குட்டி வெளியே வந்தது.துள்ளியபடி
நின்றது.இறந்து போனது என்று டாக்டர்கள் சொன்ன அதே
கன்றுதான் உயிரோடு வெளியே வந்தது.

ஆறு டாக்டர்களுக்கும் இது விந்தையான நிகழ்ச்சிதான்.
அவர்களும் அப்போதுதான் மகானின் அருட்பார்வை
எப்படிப்பட்டது என்கிற பேருண்மையைத் தெரிந்து
கொண்டனர்.

பசுமாட்டை நன்றாகத் தடவிக் கொடுத்தபின்
மகான் உள்ளே போனார்

 

Published in: on April 29, 2013 at 5:33 am  Comments (3)  

அவதார புருஷர்- பெரியவா

காஞ்சியில் ஒரு கோவிலில் பெரியவா எல்லாருக்கும் தர்சனம் குடுத்துக் கொண்டிருந்தார். அப்போது உணர்ச்சிப் பெருக்கை உடலால் சமாளிக்க முடியாமல் ஒரு தம்பதி தங்கள் பெண் குழந்தையுடன் வந்து பெரியவாளை நமஸ்கரித்தனர்.

அவதார புருஷர்- பெரியவா

அவதார புருஷர்- பெரியவா

”ஆந்த்ரப்ரபா” பத்திரிகையின் ஆசிரியரும், காந்திஜியின் நெருக்கமான தோழருமான நீலம் ராஜு வேங்கடஸேஷைய்யாவின; புதல்விதான் அந்த அம்மா. பெரியவா அவர்களுடைய க்ஷேம லாபங்களை விஜாரித்தார். அவர்கள் கண்களில் கண்ணீர் வழிந்தோட கூறியதை கேட்டு, சுற்றி நின்று கொண்டிருந்த அத்தனை பேருக்கும் மயிர்க்கூச்சல் எடுத்தது..
“இன்னிக்கு பெரியவாளோட க்ருபையாலதான் இங்க வந்திருக்கோம்…நாஙக லண்டன்ல இருக்கோம். கொஞ்ச நாளைக்கு முன்னால [ஏதோ ஒரு தேசத்தின் பெயரைக் கூறி] அந்த country க்கு flight ல போய்ண்டிருந்தோம். திடீர்னு இஞ்சின்ல ஏதோ பெரிய கோளாறு. அதுனால safe landing கூட முடியாது..ங்கற மாதிரி பைலட் எல்லாருக்கும் ரெட் சிக்னல் குடுத்தார். விமானத்துக்குள்ள இருந்த அத்தனை பேரோட மனநிலையும் சொல்லக் கூட முடியாது!

ஆனா, உயிரே போகப்போறது..ங்கற நிலைமைல எங்களால பெரியவாளைத் தவிர வேற எதையுமே நினைக்கத் தோணலை! பெரியவாளோட சரணங்களை மானசீகமா கெட்டியா பிடிச்சிண்டோம்! எங்களோட பயம் பயமாத் தெரியலை! எங்களோட டிராவல் பண்ணிக் கொண்டிருந்த அத்தனை வெளிநாட்டுக்காராளயும் தைரியமா இருக்கச் சொல்லி, “Sage of Kanchi ” ன்னு பெரியவாளை நாங்க தெய்வமாவே வர்ணிச்சு, ஆபத்பாந்தவர் அவரை வேண்டிண்டா, எந்த பெரிய விபத்தும் ஓடிப் போய்டும்ன்னு சொன்னதும், ப்ராணாபத்து வந்தா, பொழைக்கறதுக்கு எதைத்தான் பிடிச்சுக்க மாட்டா? அன்னிக்கி அந்த முழு விமானமும் பெரியவாளை த்யானிக்கற, பெரியவாளோட திருவடில தஞ்சமடையற த்யானகூடமாயிடுத்த

கொஞ்ச நேரத்துல பைலட்டுகளுக்கு cooperate பண்ணாத முக்யமான இஞ்சின்கள், கருவிகள் எல்லாமே ஏதோ அதிசயமா “miracle “ன்னு அத்தனை பேரும் [பைலட்டுகள் உட்பட] ஆச்சர்யப்படும்படி ரொம்ப லகுவா வேலை செய்ய ஆரம்பிச்சுடுத்து! சாவோட விளிம்புலேர்ந்து எங்க எல்லாரையும் பெரியவா காப்பாத்திட்டா! விமானம் கீழ இறங்கினதும், பைலட்டுலேர்ந்து அத்தனை பேரும் எங்களை சூழ்ந்துண்டு, Kanchi Sage க்கு லெட்டர் எழுதினாலோ, அவரை பார்த்தாலோ, எங்க எல்லாரோட இதயபூர்வமான நன்றியையும், நமஸ்காரத்தையும் கட்டாயம் அவருக்கு தெரிவிக்கணும்ன்னு ரொம்ப கேட்டுண்டா….எங்களு கோ ஒடனே இந்தியாவுக்கு வந்து பெரியவாளை தர்சனம் பண்ணி, அவருக்கு பாதபூஜை பண்ணனும்னு ரொம்ப தவியா தவிச்சு, நேரே இங்க வந்துட்டோம்…” என்று விம்மல்களுக்கிடைய சொல்லி முடித்தனர்.

ஆனால் பெரியவாளோ எப்போதும்போல் தனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி, தனக்கு அவர்கள் சொல்லித்தான் எதுவுமே தெரிந்தா மாதிரி மலர்ந்து சிரித்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தார். பாரிஷதரிடம் பாதுகைகளை கொண்டு வரச் சொல்லிவிட்டு, அவர்களுடைய சின்னப் பெண் குழந்தையை அருகில் அழைத்து, பெற்றோர் கொண்டுவந்திருந்த ஸ்வர்ணபுஷ்பங்கள், வாஸனை புஷ்பங்கள் எல்லாவற்றையும் அதன் குட்டி பூ போன்ற கைகளால் அள்ளி அள்ளி போடச் சொன்னார். அதுவும் அழகாக அர்ச்சனையாகவே பாதுகைக்கு புஷ்பங்களைப் போட்டது.

பெரியவா அந்த தம்பதியிடம் “நீங்க ரெண்டு பேரும் சேந்துதான் இந்தக் கொழந்தை. இது பண்ற பூஜை, நீங்களே பண்ணறதுதான்! அதோட ஒங்க கையால பண்றதை விட, இது குட்டிக் கையால பண்ணறச்சே நெறைய அர்ச்சனை, நெறைய நாழி நடக்கும்!” என்று தெலுங்கில் கூறினார். அன்று அங்கு எல்லோருமே அந்த ஆனந்தத்தை அனுபவித்தனர்.

அவதார புருஷர்களிடம் உண்மையான பக்தி கொண்டவர்கள், எங்கிருந்தாலும் எந்த ஆபத்திலிருந்தும் நிச்சயம் காப்பாற்றப் படுவார்கள்.

Published in: on April 29, 2013 at 5:19 am  Comments (2)  

MAHAPERIYAVA JAYANTHI – 2013

SRI MAHAPERIYAVA JAYANTHI–ATIRUDRAM  is to be conducted at ECHANGUDI from MAY 15’th  to 24’th – 2013.

Sree Chandrasekarendra Saraswathi Swamigal Kaingarya Trust will be performing an Ati Rudram on the occasion of Mahaperiyava’s Jayanthi  from May 15th to 24th , 2013 at Echangudi.

Mahaperiyava Jayanthi-2013

Mahaperiyava Jayanthi-2013

You can get a glimpse of the 12 AtiRudrams conducted by the Trust in the below video:

http://youtu.be/ecfDuVr5lWY

All the devotees are invited for this event

The Ati Rudra Maha Yagnam is very sacred and it drives out the calamities and difficulties of mankind. The Sri Rudram describes various atributes of Lord Siva, THE SHIV TATVA or SHIV RAHASYA. Through the chanting of the Sri Rudram, Lord Siva’s various attributes and aspects are invoked and worshipped. In the Taithareeya Samhita, 4th skanda [chapter] – the 7th sub-stanza is known as ‘Chamaka’. In this section, the letters ‘cha’ and ‘mey’ appear repeatedly and it is hence known as Chamaka.

Eleven recitations of the Sri Rudram followed by one recitation of the Chamakam is called the Ekadasa Rudram.

Eleven Ekadasa Rudram recitations make one Laghu Rudram.

Eleven Laghu Rudram recitations make a Maharudram

And eleven Maharudram recitations make an Ati Rudram!

Thus, in an Athi Rudra Maha Yagnam, the Sri Rudram will be recited 14,641 times and the Chamakam 1331 times, with the performance of 1331 Rudra Homams by 121 Ritvik priests. It is said the each word of SRI RUDRAM has hidden meaning and posses various remedies for incurable diseases.

 

Published in: on April 27, 2013 at 3:46 am  Leave a Comment  

“…அழுகையோட ஆத்துக்கு வந்துட்டேன்.”

 

Paramachariar

Paramachariar

[ The  lady in the below mentioned  incident is really blessed]

அந்த காலத்திலே ஸ்ரீராமஜெயம் எழதின வாளுக்கு வெள்ளி காசு கொடுப்பா மகாபெரியாவா . நானும் ஒரு பத்து லக்ஷம் எழுதி அவா காலடி லே சமர்ப்பிக்க எண்ணினேன்.

மகாபெரியாவா மயிலாப்பூர் கேம்ப். முதல் நாளே போய் தர்சனம் பண்ணபோது ஒரே கும்பல். தள்ளி நின்னு பார்த்து நமஸ்காரம் பண்ணினேன். கையிலே இருந்த ஸ்ரீராமஜெயம் எழுதின நோட் எல்லாம் யாரோ ஒருத்தர் புடிங்கி நான் கொடுதுகறேன்னு சொல்லி அந்த வெள்ளி காசை வாங்கி தனக்கு வெச்சுண்டுட்டார். அழுகையோட ஆத்துக்கு வந்துட்டேன்.

மனசுல கிட்ட போய் நமஸ்காரம் பண்ண முடியலையே ன்னு ஆதங்கம்..மறு நாள் அவாள்டையே போய் கதற நினைச்சு கார்த்தாலே 5 மணிக்கு குளிச்சு வாசலே கோலம் போட போனேன் . கோலம் போட்டுமுடிச்சு திரும்பி பார்த்த மாதவ பெருமாள் கோயில் குளத்துலே குளிக்க அந்த தெய்வம் என் ஆத்து வாசலே வந்தது .கண்ணுலே ஆனந்த கண்ணிரோட நமஸ்காரம் பண்ணேன். அன்னிக்கு சாயரட்சை மகாபெரியாவாளை தரிசனம் பண்ண போனேன்.மேடைலே என்னை கூப்பிட்டு ஒரு புடவை,தங்ககாசு,மாங்கல்ய சரடு வளையலாம் கொடுத்து ஸ்ரீ ராமஜயம் என்கிட்டே வந்துடுத்துன்னு ஆசீர்வாதம் பண்ணா .

அப்புறம் தினம் 5 மாசத்துக்கு தரிசனம் ஆத்து வாசலே. தரிசனம் கொடுத்த கருணை கடல் மகாபெரியாவா.

Published in: on April 17, 2013 at 5:38 am  Leave a Comment  

“WHEN YOU TWO CONVERSE, WILL IT BE IN TAMIL OR ENGLISH?”

 

Paramachariar

Paramachariar

A family went to have the darshan of HH. Along with them, they took one of their family friends who lived in the USA for some decades. The friend did not have any great faith in our religion, system and especially the monks wearing the saffron; he went along with him with utterly non-interested to meet Him. He was under the impression that HH was a fundamentalist, an uneducated monk. This NRI had no great respect at all for Him. Not only that, he uttered such inauspicious things about Him, ‘what does He know? Does He know English?’.

There was a big throng of devotees at the Mutt and the family was standing in a decent distance from Him. As usual, HH saw this family with His graceful eyes, and called all of them near to Him.

They all went near Him, the friend too.

After all the usual courteous enquires towards the family, the Master looked at the NRI friend and asked about his details, including his name, whereabouts, his predecessors, where he is working etc etc.

Then He asked, ‘you are born in India, and you know Tamil; your wife was also born in India and should know the mother tongue. When you two converse will it be in Tamil or English?’

The friend replied ‘We never use Tamil at home, we use only English. The same goes for the kids also.’

Then HH asked, ‘before speaking, you may have to think and conceive the sentence. Is the thought process in Tamil or English?’

The friend replied, ‘That too in English only’.

Some minutes later, an old lady came to HH’s darshan.

HH looked at the NRI person and said, ‘This old lady is now very poor, but once upon a time she was very rich. But even after she lost all the materialistic wealth her devotion towards the Mutt, Acharya and me has never changed even a bit. Could you please tell me what is the English word which will describe this unflinching devotion, which can’t be changed by external situations? I would like to know.’

The man was flummoxed. He thought and thought for a while but did not know that word.

HH told him, ‘please take your time and let me know’.

Even after some time, he couldn’t come up with the required word.

Then HH said, ‘Can I suggest one word? Could you please confirm whether the same can convey this meaning? EQUIPOISED’.

The man was spellbound and fell on HH’s lotus feet for pardon.

Published in: on April 15, 2013 at 4:40 am  Comments (1)  

ஜகத்குரு அருளிய அதிசய மந்திரம்

ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக எனக்குள் ஒரு கேள்வி: ஒன்றேயான கடவுளின் பல வடிவங்களான பல தேவதைகளுக்குத்தான் மூல மந்திரங்கள் உள்ளனவே தவிர, மூலமான ஒரே கடவுளுக்கென அந்த மந்திரமும் இல்லாதிருப்பது ஏன் என்பதே கேள்வி.

ஜகத்குரு

ப்ரணவம் எனும் ‘ஓம்’ மூலக்கடவுளுக்கே உரித்தான மந்திரந்தான் ஆயினும் வேறு பல மகான்களின் கருத்துக்கு மாறாக, சாஸ்திரக் கருத்தையே மட்டுமே ப்ரணவ ஜபம் செய்யலாம், ஏனையோர் முதலில் ‘ஓம்’ என்று கூறி அதோடு குறிப்பிட்டதொரு தேவதைக்கான மந்திரத்தைச் சொல்லலாமே தவிர, தனியாக ப்ரணவ ஜபம் செய்யலாகாது என்று கூறி வந்துள்ளார்.

ப்ரணவம் எனும் ஓம்காரம் நமக்குள் தன்னியல்பாகவே இதயத்தை ஒட்டிய அநாஹத சக்கரத்திலிருந்து எழும் ஒலி; எனவே சிலருக்குத் தன்னியல்பாகவே ‘ஓம்’ என்பது ஒலிக்கும். அவர்கள் மட்டுமே துறவியாய் இல்லாவிடினும் ப்ரணவ ஜபம் செய்யலாம் என்பது ஸ்ரீ பெரியவாளின் கருத்து.

இவ்விஷயமாக ஸ்ரீ பெரியவாளையே கேட்டுத் தெளிவு பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் முப்பத்தேழு ஆண்டுகளுக்கு முன்பு, அப்பொழுது அவர்கள் முகாமிட்டிருந்த தேனம்பாக்கத்துக்குச் சென்றேன். நேரம்: மாலை ஐந்து மணி.

முகாமில் இருந்த கிணற்றின் ஒரு புறத்தில் இருந்த குடிலை ஒட்டிய பகுதியிலிருந்து ஸ்ரீபெரியவாள் தரிசனம் தருவார்கள்; கிணற்றின் மறுபுறத்திலி ருந்து மக்கள் தரிசனம் பெறுவார்கள்.

அன்றும் அப்படியே நடந்தது. நாங்கள் 40-50 பேர் இருந்தோம். வழக்கம் போல் அதில் பல்வேறு வயதினரும், பல்வேறு சமூகத்தினரும் இருந்தோம். ஓரிரு வெளிநாட்டவரும் இருந்தனர்.

தரிசனத்தின்போது ஓர் ஐயங்கார் மாது, நேற்றிரவு பெரியவாள் சொப்பனத்தில் வந்து ஏதோ ஒரு மந்திரம் உபதேசித்தீர்கள்; ஆனால் என் துரதிர்ஷ்டம். இன்று காலை அந்த மந்திரம் மறந்து போய்விட்டது! பெரியவாள் அவசியம் அந்த மந்திரத்தை மறுபடி உபதேசிக்க வேணும். எப்பொழுது மடியாக வந்து அந்தரங்கமாக உபதேசம் பெறலாம்?” என மிகவும் ஆதுரத்துடன் வினவினார்.

அப்பொழுது சாஸ்திரக் காவலரான ஸ்ரீ பெரியவாளா பேசுகிறார் என்று பேராச்சர்யம் அடையுமாறு அவர்கள் கூறிய மறுமொழி: மடியும் வேண்டாம்; அந்தரங்கமும் வேண்டாம்; பகிரங்கமாக எல்லோருக்குமாகச் (அம்மந்திரத்தை) சொல்கிறேன்.” – இப்படிச் சொல்லி கணீரென்ற தெய்வத்தின் குரலில், அம்பகவ”: அம் பகவ”: அம் பகவ” என மும்முறை உபதேசித்தார்கள்.

இப்படியும் மந்திரமூர்த்தியே ஆகிய ஸ்ரீமஹாபெரியவாளிடமிருந்து கேளா மலே உபதேசமா என்ற பேருவகையுடன் அங்கு கூடியிருந்த எல்லோரும் ‘அம் பகவ’: மந்திரோபதேசம் பெற்றோம்.

ஆச்சர்ய உணர்வைத் தொடரும் விதத்தில் அவர்கள் ‘இதை ஜபிக்க எந்த நியமமும் (விதிமுறையும்) இல்லை. எவரும், எந்த நேரமும் ஜபிக்கலாம்’ என்றும் கூறினார்கள்.

மந்திரத்தின் உச்சரிப்பு: UMBHAGAVAHA (UMBRELLA என்பதிலுள்ள UM ஒலி) ‘பகவ’ என்பதன் முடிவான ‘வ’: என்பதை ‘வஹ’ என்று கூறவேண்டும். ஒலியியலின்படி ‘வ’ என்பதற்கும் ‘வஹ’ என்பதற்குமிடையே சிறு மாறுபாடு உண்டு. ஆனால் நாம் அதைக் கருத்தில் கொள்ள வேண்டியதில்லை. அன்று ஸ்ரீ பெரியவாளும் ‘வஹு’ என்றே ஸ்பஷ்டமாக மொழிந்தார்கள்.

ஆகக்கூடி எந்த மந்திர சாஸ்திர நூலிலும் காணப்படாத ‘அம் பகவ’: என்ற மகா மந்திரம் ஸ்ரீ பெரியவாளின் வாய்மொழியில் நமக்கெல்லாம் ஓர் அமுதச்சுனையாகக் கிடைத்துவிட்டது!

‘பகவ’: என்பதற்கு ‘பகவானே!’ என்று பொருள். ‘அம்’ என்பது ஒரு மங்கல அக்ஷரம்.

நெடுங்காலமாக எனக்குள் இருந்த கேள்விக்கான பதிலும் கிடைத்துவிட்டது! அனைத்து தெய்வங்களுமான மூலக் கடவுளுக்குரிய மந்திரம் ‘அம் பகவ!’எந்த தெய்வத்தை இஷ்டமூர்த்தியாகக் கொண்டவரும் இம் மந்திரத்தை அம்மூர்த்திக்குரியதாகக் கருதி ஜபிக்கலாம் என்றும், ‘பகவ;’ என்பது ஆண்பாலில் இருந்தாலும் பெண் தெய்வங்களை ஸ்மரித்தும் இதனை ஜபிக்கலாம் என்று பெரியவரிடமிருந்து விளக்கம் பெற்றோம்.

ஸ்ரீபெரியவாள் தமது நீண்ட நெடிய நூறாண்டு வாழ்வில் அன்று ஒரே ஒருநாள்தான் இப்படியொரு மந்திரத்தை – அதுவும் பஹிரங்கமாக மொழிந்திருக்கிறார்கள் என்பது இன்னொரு பேராச்சர்யம்!

எல்லோருக்குமான இத் தங்கப் புதையலை 36 ஆண்டுகள் நான் எனக்குள் மட்டுமே வைத்திருக்கிறேன்! சென்ற ஆண்டிலிருந்துதான் எனக்குத் தெரிந்த மற்ற பலருக்கும் இதனைக் கூறி வருகிறேன். அவர்களில் ஸ்ரீ மகா பெரியவர்களையே இஷ்டதேவதையாகக் கொண்ட சிலர் இம்மந்திர ஜபத்தால் தங்களுக்கு விசேஷ மான பலன் கிடைப்பதாக உவகையுடன் கூறுகிறார்கள்

[Courtesy: ரா. கணபதி]

Published in: on March 28, 2011 at 9:07 am  Leave a Comment  

விநாயகர் அகவல் பற்றி காஞ்சி பெரியவர் கருத்து

காஞ்சிப்பெரியவர்

மற்ற கிழமைகளில் மறநது விட்டாலும் விநாயகரை வெள்ளிக் கிழமை மற்றும் சதுர்த்தி திதிகளில் மறக்காமல் வணங்க வேண்டும். அவ்வாறு, விநாயகரை வணங்கும் போது, உங்கள் நினைவிற்கு வர வேண்டிய இன்னொருவர் “அவ்வையார்”.[ஔவையார்]

அவர் ” சீதக்களப  சென்தாமரைப்பூம் ” என்று துவங்கும் “விநாயகர் அகவல்” என்னும் பாமாலையை எழுதியவர்.  இதை சதுர்த்தியன்று பாடினால், நிங்கள் பிள்ளையாரிடம் ஏதாவது வேண்டினால்,  அவர்
இரட்டிப்பாகத் தருவார்.  விநாயகர் அகவல் படிப்பது வீட்டுக்கும், நாட்டுக்கும் மட்டுமல்ல,  உலகுக்கே ந்ல்லது.
காஞ்சிப்பெரியவர் இது பற்றி கூறும்போது, ” நமக்கும், நாட்டுக்கும், உலகத்துக்கும் நன்மை உண்டாவதற்கு
அவ்வையார் மூலம் ,பிள்ளையாரைப் பிடிப்பதே வழி” என்கிறார்.

ஔவையார் அருளிய விநாயகர் அகவல்

சீதக் களபச் செந்தா மரைப்பூம்

பாதச் சிலம்பு பலஇசைப் பாடப்

பொன் அரை ஞாணும் பூந்துகில் ஆடையும்

வன்ன மருங்கில் வளர்ந்து அழகுஎ றிப்பப்

பேழை வயிறும், பொரும்பாரக் கோடும் 05

வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்

அஞ்சு கரமும் அங்குச பாசமும்

நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்

நான்ற வாயும் நாலிரு புயமும்

மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் 10

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்

திரண்ட முப்புரிநூல் திகழொளி மார்பும்

சொற்பதம் கடந்த தூய மெய்ஞ்ஞான

அற்புதம் நிறைந்த கற்பகக் களிறே

முப்பழம் நுகரும் மூஷிக வாகன 15

இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித்

தாயாய் எனக்குத் தான் எழுந்து அருளி

மாயாப் பிறவி மயக்கம் அறுத்தே

திருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய்ப்

பொருந்தவே வந்துஎன் உளம்தனில் புகுந்து 20

குருவடிவு ஆகிக் குவலயம் தன்னில்

திருவடி வைத்துத் திறமிது பொருள் என

வாடா வகைதான் மகிழ்ந்து எனக்கு அருளிக்

கோடா யுதத்தாற் கொடுவினை களைந்தே

உவட்டா உபதேசம் புகட்டிஎன் செவியில் 25

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி

ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்

இன்புறு கருணையின் இனிதெனக்கு அருளிக்

கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து

இருவினை தன்னை அறுத்துஇருள் கடிந்து 30

தலமொரு நான்கும் தந்துஎனக்கு அருளி

மலம் ஒரு மூன்றின் மயக்கம் அறுத்தே

ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்

ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி

ஆறாதாரத்து அங்குச நிலையும் 35

பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே

இடைபிங் கலையின் எழுத்து அறிவித்துக்

கடையிற் கழுமுனை கபாலமும் காட்டி

மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்

நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் 40

குண்டலி அதனில் கூடிய அசபை

விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்

காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் 45

குமுத சகாயன் குணத்தையும் கூறி

இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்

உடற்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்

சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்

எண்முகம் ஆக இனிதெனக்கு அருளி 50

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்

தெரிஎட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்

கருத்தினில் கபால வாயில் காட்டி

இருத்தி முத்தி இனிதுஎனக் கருளி

என்னை அறிவித்து எனக்கருள் செய்து 55

முன்னை வினையின் முதலைக் களைந்தே

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்

தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து

இருள்வெளி இரண்டிங்கு ஒன்றிடம் என்ன

அருள்தரும் ஆனந்தத்து அழுத்தி என் செவியில் 60

எல்லை இல்லா ஆனந்தம் அளித்து

அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்

சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி

சித்தத்தின் உள்ளே சிவலிங்கம்காட்டி

அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்க் 65

கணுமுற்றி நின்ற கரும்பு உள்ளே காட்டி

வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்

கூடும்மெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

அஞ்சு அக்கரத்தின் அரும்பொருள் தன்னை

நெஞ்சக் கரத்தின் நிலையறி வித்துத் 70

தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட

வித்தக விநாயக விரைகழல் சரணே

விநாயகர் அகவல் முற்றிற்று

Published in: on September 15, 2010 at 7:16 am  Comments (2)  

தீபாவளியைக் கொண்டாடுவதன் தாத்பர்யம்”

 கண்ணன், நரகாசுர சம்ஹாரம் செய்ததைக் கண்டு, நரகாசுரனின் தாயாருக்கு துக்கம் பொங்கியது. என் பிள்ளை போய்விட்ட துக்கம் உண்டு. இருப்பினும் உலகத்தாருக்கு எந்த துக்கமும் வரக் கூடாது. இந்த நாளில், அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும்  என வேண்டினாள்!  “இந்த வேண்டு கோள்தான், தீபாவளிப் பண்டிகைக்கு தனிப்பெருமை சேர்ந்தது. நாம் துன்பப் பட்டாலும் பரவாயில்லை. உலகம் க்ஷேமமாக இருக்க வேண்டும் எனும் மனப்பான்மையை வள்ர்த்துக் கொள்வதுதான் தீபாவளியைக் கொண்டாடுவதன் தாத்பர்யம் என்று அருளியுள்ளார் ஸ்ரீ மகா ஸ்வாமிகள்.
 
 

நடமாடும் தெய்வம்

தீபாவளிக்கு மூன்று குளியல்:

* தீபாவளியன்று நமக்கு இருவிதமான குளியலை செய்யும்படி சாஸ்திரம் குறிப்பிடுகிறது. அன்று வெந்நீரில் அதிகாலைப் பொழுதில் ஓரு முகூர்த்த நேரம் கங்கை நதியே இருப்பதாக ஐதீகம். அதனால், அந்த நேரத்தில் எண்ணைய் ஸ்நானமாக வெந்நீரில் குளிக்க வேண்டும். அப்போது, நரகாசுரன், சத்திய பாமா, கிருஷ்ணர், பூமாதேவி நினைவு நமக்கு வரவெண்டும். இதற்கு கங்கா ஸ்நானம் என்று பெயர்.

* வெந்நீர் குளியலுக்குப்பின், சூரியன் உதிந்த பின், ஆறு நாழிகை நேரம் வரை, காவிரி உட்பட எல்லா புனித நதிகளும் குளிர்ந்த நீரில் இருப்பதாக ஐதீகம். ஆப்பொது, குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். இதற்கு, துலா ஸ்நானம்என்று பெயர். இரண்டாம் ஸ்நானத்தில் பரமேஸ்வரன் நினைவு வரவேண்டும்.

* வெளி உடம்பினை தூய்மையாக்கின பின், பெரிய ஸ்நானம் ஒன்றுண்டு. அதுதான் நம் உள் அழுக்கை எல்லாம் அகற்றும் கோவிந்தேதி ஸதா ஸ்நானம் அப்போது, நம் ஜீவன் தூய்மையாகிறது. பெரிய ஸ்நானம் என்று சொன்னதால், மற்ற இரண்டும் முக்கியமில்லை என்று எண்ணிவிடக்கூடாது. இந்த மூன்றுமே முக்கியம் தான் என்பதை உணர்ந்து, ஸ்நானம் செய்யுங்கள். 

 

ஸ்ரீ மகா ஸ்வாமிகள்

தீபாவளிப் பண்டிகையை பகவத் கீதையின் தம்பி என்பார் ஸ்ரீ காஞ்சி மகா ஸ்வாமிகள். கீதைகள் பல இருந்தாலும், பகவத் கீதை தனிப்பெருமைபெற்றதாக எப்படி உள்ளதோ, அதேபோல் பண்டிகைகள் பல இருப்பினும் தனிப் பெருமையுடன் திகழ்கிறது தீபாவளித் திருநாள்.

[ காஞ்சிப் பெரியவர்]

Published in: on December 21, 2009 at 9:10 am  Comments (2)  
Tags: , ,